Header Ads



இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுத்து, உண்பது நியாயமா..?

-RM. Saheeth-

கால்நடைகளைக் கொல்வது இரக்கமற்ற செயல், ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று, அதன் இறைச்சியை உண்கிறார்களே ஏன்?

சைவ உணவு உண்பது இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது, இந்த இயக்கங்களில் பல, கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையைக் கொண்டவை. ஏராளமானோர் மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளைப் பறிப்பதாகும் என்ற கருத்தினைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் அல்லாஹ் இந்தப் பூமியைப் படைத்து அதில் மனிதன் பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் தாவரங்களையும்ட படைத்திருக்கிறான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டப் பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக் கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.
இந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.

ஒரு முஸ்லிம் அனுமதிக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணலாம். சைவ உணவைத் தொடர்ந்து உண்ணக்கூடிய முஸ்லிம் ஒரு நல்ல முஸ்லிமாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும். என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை. அதே சமயம் ஒரு முஸ்லிம் அசை உணவு உண்பதற்கும் அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.

இறை நம்பிக்கை கொண்டவர்கயே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின்னால் உங்களுக்குக் கூறப்படுபவை தவிர, கால்நடை வகையைச் சேர்ந்த அனைத்து பிராணிகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5:1) என்பதைச்; சுட்டிக்காட்டுகிள்றது.

'மேலும், அவன் கால்நடைகளையும் படைத்தான்! அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது, உணவும் இருக்கிறது. இன்னும் பல பயன்களும் இருக்கிள்றம. (அல்குர்ஆன் 16:5)
இந்த இறைவசனம் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.
உடலுக்குத் தேவையான முழு புரோட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஒரு சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத, ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமன அமினோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் விற்றமின் டீ1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாமிச உணவு உண்ணக், கூரிய பற்களும்- தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்:

நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு-மாடு போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தார், அவை தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொணடுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை மட்டும் கொண்டுள்ளதை அறியலாம். அது போல மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு  கூரிய பற்களையும் தாவர வகை உணவுகளை உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களையும் காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மட்டும்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் மனிதர்களை இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களைக் கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?, மாமிச உணவையும் தாவர வகை உணவையும் உண்ண வேணடும் என்ற நோக்கத்தில் தான் இறைவன் மனிதர்களுக்குக் கூரிய பற்களையும், தட்டையான பற்களையும் சேர்த்து படைத்திருக்கிறான்.

இந்து வேதங்கள் மாமிச உணவ உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது:

இந்துக்களில் ஆராளமானோர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களிலன் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்னவெனில் இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து மத குருமர்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.

இந்துக்ளின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரம் கூறுவது என்ன?

உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந் நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே! ஏனெனில் சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும் படைத்தவன் கடவுளே! (மனு சாஸ்திரம் 5:30)
மாமிச உணவு உண்பதும் சரியான தியாகமே! இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகம். (மனு சாஸ்திரம் 5:31)

பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே, பலியிடுவதற்காகக் கால்நடைகளை அறுப்பது என்பது – கால்நடைகளைக் கொல்வது ஆகாது. (மனு சாஜ்ரிரம் 5:39,40)  இவ்வாறு இந்து மத வேதங்களும் சாஸ்திரங்களும் மாமிச உணவு உண்ணவும், உணவுக்காக கால்நடைகளைக் கொல்லவும் இந்துக்களுக்கு இனுமதியளித்திருக்கிறது. 

இந்து மத வேதங்கள் இந்துக்களுக்கு அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும், பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்பட்டிருப்பதுதான்.

தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு:

பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையைப் போதிப்பவைகளாக இருப்பதால்தான். ஒரு உயிரைக்கூடக் கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில், மேற்படி கொள்கையைக் கடைப்பிடிக்கும் மனிதர்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதுமு; அறிந்த விடயம். எனவே, சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும், உயிர்களைக் கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல. என்ற கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களைக் கொல்வது உயிருள்ள பிராணிகளைக் கொல்வதை விடக் குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் தாவரங்களும் வலியை உணர முடியும் என்ற உண்மையை நமக்குக் கற்றுத் தருகிறது. 20 ர்நசவண- க்கு குறைவான சப்தத்தையும் 20000 ர்நசவண- க்கு மேற்பட்ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியவில்லை. அமெரிக்காவில் விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினைக் கண்டுபிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினைக் கண்டுபித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தவாரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் மகிழ்ச்சி, வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி,வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.

இரண்டு அல்லது மூன்று புலன்களைக் கொண்டு உயிர் வாழக் கூடியவைகளைக் கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது:

ஒருமுறை ஒரு சைவ உணவு உட்கொள்பவர் என்னோடு வாதிடும் போது சொன்னார்: 'மிருகங்கள் ஐந்தறி கொண்டவை. ஆனால் தாவரங்கள் இரண்டு அல்லது மூன்று புலன்களைக் கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களைக் கொல்வதைவிட இரண்டு அல்லது மூன்று புலன்களைக் கொண்ட தாவரங்களைக் கொல்வது குறைந்த பாவம் இல்லையா?' என்ற கேள்வியை முன்வைத்தார். 'உதாரணத்திற்கு உங்களது சகோதரர் பிறவியிலேயே செவிட்டு, ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான உங்களது செவிட்டு ஊமைச் சகோதரரை ஒருவர் கொலை வெய்து விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமைச் சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர். ஆகவே கொலையாளிக்கு குறைந்த தண்டனைத் தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா? மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள், காதுகேளாத, வாய் பேச முடியாத அப்பாவியைக் கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்' என்றவுடன் அமைதியானார்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168-வது வசனம் தீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது, மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட பொருள்களைப் புசியுங்கள். மேலும், சைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான். (அல்குர்ஆன் 2:168)

4 comments:

  1. True. This should be translated in to Sinhalese & English to convey the fact & reality.

    ReplyDelete
  2. உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற காருண்யம் வேறு.. மாடுகளை அறுக்கக்கூடாது எனும் தற்போதைய கோஷம் வேறு.

    பின்னைய கோஷத்தின் பின்னே மறைந்திருப்பது, 'நான் புனிதமாக நினைப்பதை நீ மட்டுமென்ன உண்பது..? என்ற ஆற்றாமையே தவிர ஜீவகாருண்யமன்று!

    ReplyDelete
  3. Why My3's portrait in this article? What is the connection?

    ReplyDelete

Powered by Blogger.