"ஜனாதிபதி மைத்திரிபால ஆறடி மண்ணுக்குள் அடங்கியிருப்பார்"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்திருக்காவிட்டால், அவர் ஆறடி மண்ணுக்குள் அடங்கியிருப்பார் என காணாமல் போன ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எகனெலிகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தெரிவித்திருந்தார் அதனையே நான் சுட்டிக்காட்டுகின்றேன். குற்ற விசாரணைகள் தொடர்பில் எனக்கு நிபுணத்துவம் கிடையாது என்ற ஜனாதிபதியின் கருத்தை நிராகரிக்கின்றேன்.
குற்ற விசாரணை பற்றி எனக்கு எதுவும் தெரியாது நான் சட்டத்தரணியுமல்ல எனினும், இந்த காலப்பகுதியில் வழக்கு தொடர்பில் மிகவும் பரந்துபட்ட அறிவும் அனுபவமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் இன்று சிறைச்சாலையில் இல்லை அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்கின்றார்கள்.
எவ்வாறாயினும், விசாரணை நடத்தும் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது நம்பிக்கையுண்டு என சந்தியா எக்னெலிகொட பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சந்தியா கூற முடியாது. அவர் குற்ற விசாரணை தொடர்பில் நிபுணரல்ல எனவும், அண்மையில் ஜனாதிபதி பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தமை குறித்து சந்தியாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment