மகிந்த ராஜபக்ஷவுக்கு, இருமுனை கத்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சோதிடமும் மாய மந்திரமும் இரு முனை கத்தியாக காணப்படுகின்றது. இவற்றில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை அவரை வெற்றியின் உச்ச மட்டத்திற்கும் அதேவேளை அனர்த்தத்தின் அதல பாதாளத்திற்கும் இட்டுச் சென்றிருந்தது.
தற்போது சோதிட ரீதியான எதிர்வு கூறுகை, கொழும்பிலுள்ள மாளிகையை ராஜபக்ஷவிற்கு நிராகரிப்பதற்கான அச்சுறுத்தலை கொடுத்திருக்கிறது. அவர் விரக்தியுடன் அங்கு தங்கியிருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவரின் அரசியல் எதிர்காலம் குறித்து சோதிடர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.
இப்போது அவரின் அரசியல் அதிர்ஷ்டம் தாழ்ந்த மட்டத்திற்கு செல்வதாகவும் அந்த இல்லத்தில் அவர் இருந்தால் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எதிர்வு கூறியுள்ளனர். ராஜபக்ஷவின் கவலையாக அந்த இல்லத்தின் உரிமையாளரும் பாரிய சொத்து விற்பனை வர்த்தகருமான ஏ.எஸ்.பி. லியனகே அந்த உடன்பாட்டை திரும்ப மாற்றியமைத்து ராஜபக்ஷவிற்கு இல்லத்தை வாடகைக்கு விடுவதற்கு விரும்புகிறார்.
ராஜபக்ஷவிடமிருந்து அந்த இல்லத்தை அவரால் திரும்பப் பெற்றுக் கொள்ள இயலாதென லியனகேயின் சோதிடர் எதிர்வு கூறியுள்ளார். இதனால் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் அவர் இருக்கிறார். ஒரு புறத்தில் ராஜபக்ஷவுக்கு அவர் அதிகளவுக்கு கடமைப்பட்டுள்ளார்.
நைஜீரியாவுக்கான இலங்கைத் தூதுவராக ராஜபக்ஷவே அவரை நியமித்திருந்தார். மறுபுறத்தில் மிகவும் விருப்பத்துடன் நிர்மாணித்த பழ மரங்கள் சூழ்ந்த பதினெட்டு அறைகளைக் கொண்டதும் ஆற்று ஓரத்தில் இருப்பதுமான அந்த மாளிகையுடனான பிணைப்புகளை அவர் துண்டிக்க வேண்டியுள்ளது.
"நான் இதனை விற்றால் எனது மனைவி விவாகரத்து செய்யப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்' என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு லியனகே கூறியிருந்தார். ராஜபக்ஷவை போன்றே லியனகேயும் சோதிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார். வாஸ்து சாஸ்திரம் மற்றும் தொவில் (தீய சக்திகளை விரட்டும் சிங்கள பாரம்பரிய முறைமை) என்பவற்றை அவர் அதிகளவுக்கு நம்புகின்றார்.
ராஜபக்ஷவுக்கு வீட்டை வாடகைக்கு வழங்குவதற்கு அவர் இணங்குகின்ற சமயம் அங்கிருந்த நீச்சல் தடாகத்தை மண்ணிட்டு நிரப்ப வேண்டுமென ராஜபக்ஷ விரும்பினார். ஏனெனில் கேரளாவைச் சேர்ந்த சோதிடர் ஒருவர் வீட்டின் மேற்குப் புறத்தில் நீர் நிலை இருப்பது தொடர்பாக எச்சரித்திருந்தார்.
அவ்வாறு இருப்பது வீட்டில் குடியிருப்பவரின் சக்தியை குறைத்துவிடும் என அந்த சோதிடர் எச்சரித்திருந்தார். இது வாஸ்து வில் நான் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக செய்யப்பட்டது என்று சண்டே ஸ்டேன்டட் பத்திரிகைக்கு லியனகே கூறியிருந்தார். ராஜபக்ஷ அதன் பின்னர் கட்டாதியா (தீய சக்திகளை விரட்டும் சிங்கள மனிதர்) இரவு பூராகவும் தொவில் கிரியை நடத்துவதற்காக அவரை வரவழைத்திருந்தார்.
கிரியையின் பின்னர் அங்கு குடியிருப்பவர் சக்தி உள்ளவராக வருவார் என கட்டாதியா என்னை எச்சரித்திருந்தார். வீட்டை என்னால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்குமென கூறியிருந்தார் என்று லியனகே தெரிவித்திருந்தார்.
அந்த நீச்சல் தாடகத்தில் நிரப்பப்பட்ட மண்ணுக்குள் ராஜபக்ஷ அதிகளவு தங்கத்தை மறைத்து வைத்திருப்பதாக தொலைக்காட்சி நிறுவனமொன்று தெரிவித்திருந்தது. மண்ணிட்டு நிரப்பும் போது நான் அங்கு இருக்கவில்லை.
அங்கு தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நான் நம்பவில்லை. மண்ணை அகற்றி விசாரணை செய்யுமாறு நான் பொலிஸாரை கேட்டுள்ளேன் என்று லியனகே தெரிவித்திருக்கிறார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

முட்டாள் மூடர் கூடம்
ReplyDeleteஇன்னும் இவர்கள் திருந்தவேயில்லை
ReplyDelete