மாவடிப்பள்ளி பொது நூலகத்தை, ஏமாற்றுவோரின் கவனத்திற்கு..!
2013ஆம் ஆண்டு தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் அம்பாரை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட (தயட்டக் கிறுல) தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகானதின் அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக் குட்பட்ட மாவடிப்பள்ளிக் கிராமத்தில் கட்டப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட பொது நூலகத்தை திறக்கமல் அரசியல் வாதிகள் கால இழுத்தடிப்பு செய்வதன் மர்மம் என்ன?
வரலாற்றுக் காலம் தொட்டு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ் என்று நம்பி வாக்களித்தது குற்றமா?
அல்லது கிராமத்தில் உள்ள மக்களை இளைஞர்களை மாணவர்களை இன்னும் மடயர்கள் ஆக்கலாம் என்று என்னிக் கொன்டிருக்கின்றனரா?
நாங்கள் அஸ்ரப் நகர் பற்றி பேசவில்லை, நாங்கள் நாவிதன்வெளி பற்றிப் பேசவில்லை, நாங்கள் மரிச்சுக் கட்டி வில்பத்து பற்றிப் பேசவும் இல்லை, எமது கிராமத்துக்கான தனியான பிரதேச சபை பற்றிப் பேசவில்லை, அல்லது எங்கள் கிராமத்தை தனி நாடாகப் பிரகடனப் படுத்துங்கள் என்று பேசவும் இல்லை கேட்கவும் இல்லை நாங்கள் கேட்பதெல்லாம் கட்டப்பட்டு பூர்த்தியாகிக் கிடக்கின்ற எங்களது நூலகத்திற்கு தளபாட வசதியைச் செய்து உடனடியாகத் திறந்து தாருங்கள் என்று மாத்திரமே!
முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியில் இருக்கிறது, கிழக்கு மாகான முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் காரர், இராஜாங்க அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் காரர் இவர்கள் அத்தனை பேரும் கிராம மக்களை மடயர்களாக்கு கிறார்களா? என்று என்னத் தோன்றுகின்றது.
எமது அயற்கிராமத்தினுடைய முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்வாதி ஒருவர் இரண்டு முறை விஜயம் செய்து எனது சொந்த நிதியில் தளபாடத்துக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றேன் என்று கூறி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது ! அய்யா நாங்கள் ஒன்றும் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை நீங்கள் சொந்த நிதியில் செய்யவேண்டிய தேவையும் இல்லை அரசாங்க நிதியில் உங்களால் செய்து தர முடியாதா? இல்லை நீங்கள் கட்சியில் கையாலாக நிலையில் உள்ளீர்களா?
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அம்பாறை யில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கு பற்றிவிட்டு வீடுதிரும்பும் வளியில் முதலமைச்சர் அவர்கள் இருட்டு நேரம் நூலகத்திற்கு சென்று பார்வை இட்டு வீர வசனம் பேசிச் சென்றிருக்கின்றார். உடனடியாக தளபாட வசதியைச் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று ஆனால் இன்றுவரை நிலமை அப்படியே இருக்கின்றது ? அய்யா உங்களுக்கு உடனடியாக என்பது 09 மாதமா? அய்யா எங்களுக்குத் தெரிந்த உடனடியாக என்பது ஒரு வாரம் அல்லது இரு வாரம் தான்.
இராஜாங்க அமைச்சர் விஞயம் செய்து 3 லட்சம் ரூபாவுக்கு புத்தகம் தருகிறேன். உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி இருக்கின்றார் சொல்லி 06மாதம் கடந்தும் பயனில்லை.
அய்யா ! எங்கள் கிராமத்தில் உள்ளவர் கள் மடையர்கள் , அரசியல் ரீதியாக ஏமாற்றலாம் என்று என்னத் தோன்றுகிறதா உங்களுக்கு !
அய்யா நாங்கள் பிச்சை கேட்க வில்லை! வாக்களித்த தற்காவது கைமாறு செய்யுங்கள் என்றுதான் கேட்கின்றோம் .
இதற்காக நாங்கள் மக்களோடு மக்களாக வீதிக்கு இறங்குவதற்கும் எங்களது இளைஞர்கள் தயார் ! பொருத்திருந்து பாருங்கள் காலம் பதில் சொல்லும்.
Post a Comment