Header Ads



ரவூப் ஹக்கீமுடன், இணையத் தயார் - றிசாத் பதியுதீன்

அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் நலன்களை வென்றெடுக்க முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் இணைந்து செயற்படுவதைத் தவிர மாற்றுவழி இல்லை எனவும் தெரிவித்தார்.

இதகுறித்து அவர் மேலும் கூறியதாவது.

இலங்கை முஸ்லிம்களுக்கு இது முக்கியமானதொரு காலகட்டம். யாப்பு சீர்திருத்தம், உள்ளுராட்சி நிர்ணய விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் நடைபெறவுள்ளன. இன்னும் பல சவால்களும் எமக்கு முன் உள்ளது.

இந்தநிலையில் எந்தவித நிபந்தனைகளும் இன்றி, முழுமனதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளேன். ஹக்கீம் மாத்திரமல்ல முன்னாள் அமைச்சர்கள் அதாவுல்லா பேரியல் அஷ்ரப் போன்றோருடனும் நான் இணைந்து செயற்பட தயார்.

இங்கு முஸ்லிம்களின் நலனே பிரதானமானது. அதற்காக இணையத் தயார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரத்தில் மலையக மற்றும் தமிழ் சமூகங்கள் ஒன்றுபட்டுள்ளன. நாம் பிரிந்துநின்று செயற்படமுடியாது. எமது சமூக நலன்கருதி சுயநலன்களுக்கு அப்பால் சிந்திப்போமாயின் இணைந்து செயற்படுவதைத் தவிர எங்களுக்கு மாற்றுவழி கிடையாது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது, முஸ்லிம்களின் நலன்களை முன்வைப்பதற்காக ஏற்கனவே அமைச்சர்கள் காபிர் காசிம், பைசர் முஸ்தபா ஆகியோருடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.

மேலும் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், எம்.ஐ.எம். மொஹ்தீன் ஆகியோர் அடங்கலான குழுவினர் இதுகுறித்த தமது செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளனர். இவ்விடயத்தில் முழு முஸ்லிம் சமூகத்தையும் விழிப்பூட்டவும், அறிவுறுத்தவும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உதவியையும் நாடவுள்ளோம்.

எனவே சகல வேறுபாடுகளையும் மறந்து இந்தப்பணிகளில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும். இதற்காக என்னால் ஆன முழு ஒத்துழைப்புகளையும் நல்குவதற்கு காத்திருக்கிறேன். 

முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒரே அணியில் ஒன்றுபட்டு தமது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதன் மூலம் கூடிய பயன்களை பெறலாம். பிரிந்து நின்று செயற்படுவதால் சமூகத்தின் நலன்கள் பின்நகர்த்தப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த அபாயத்தை கவனத்திற்கொண்டு செயற்பட முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் எனவும் றிசாத் பதீயுதீன் மேலும் தெரிவித்தார்

14 comments:

  1. சரியான முடிவு முஸ்லிம் இனத்திற்கு பொருத்தமான தலைவன் தனது சமுகத்தை தற்காலத்தில் சிந்திக்கும் ஒரே ஒரு அரசியல் வாடி மறைந்த தலைவருக்கு பிறகு. அனால் இதற்கு குள்ள நரி நிறைந்த காங்கிரஸ் ஒத்து வருமா என்பதைத்தான் பொருது இருந்து பார்ப்பம்

    ReplyDelete
  2. Allah emazu samoohathitku uzavi seywanaha, ungal arpanippuhal thodarattum

    ReplyDelete
  3. Welldone Hon.Rizad. I appreciate and welcome your decision. It's a must to get united and win our rights through the new constitution. It's a duty of muslim medias to make awareness to our people regarding the constitutional change and not the beef matter.

    ReplyDelete
  4. கட்சிகள் வேறாகினும் கொள்கைகள் ஒன்றே அந்த உன்மையை தலமைகள் மறந்தாலும் மக்கள் ஒருபோதும் மறப்பதிற்கில்லை அவ்வாறான கொள்கைகளுடன் தலமைகள் பயணிப்பதாயின் சந்தர்ப்பம் வரும்போது தூர நின்று வேடிக்கை பார்ப்பதற்கும் அழைப்பிதழ் கொடுப்பதற்கும் என்ன திருமணவீடா?

    ReplyDelete
  5. ஏன் ஹகீமை போட்டுதள்ளிவிட்டு முஸ்லிம்காங்கிரஸ் கட்சியை கைபற்ற ஆசைபோலும்!!!

    ReplyDelete
  6. ஒன்று படவேண்டிய காலம் கரித்துள்ளது

    ReplyDelete
  7. ஒருவர் நல்ல நிலைமையில் உள்ளபோது தனது சகபாடியான இன்னொருவரின் வயிற்றலடித்து உண்ணவேண்டுமென்று எண்ணுவதற்கு அவசியமிருக்காது.

    அந்த வகையில் மு.கா. தலைவரோடு இணைந்து செயற்படுவதற்கு நினைக்கும் அமைச்சர் திரு. ரிசாட்டின் கோரிக்கையிலுள்ள யோக்கியத்தை புரிந்துகொள்ளலாம்.

    நமது சமூகத்திற்காக குறுகிய இலாப நோக்கங்கங்களைத் தியாகித்து சில விட்டுக்கொடுப்புகளையும் செய்வதற்கு மு.கா. உட்பட அனைவரும் முன்வந்தால் தூரநோக்கிலான அரசியல் அனுகூலங்களை வென்றெடுக்க முடியும்.

    ReplyDelete
  8. Timely decision, whatever his motives, there must be a united front to win our rights...

    ReplyDelete
  9. சுயநலத்துக்காக பிரிவதும்.... சுனலத்துக்காக சேர்வதும்....... சூடு சுரனையற்றவர்களின் குணநலம். எங்களது பணிவான வேண்டுகோள், உங்களது சுயநலத்துக்காக முஸ்லிம் மக்களின் உரிமையை விற்று விடாதீர்கள், சோரம் போய் விடாதீர்கள். அரசியல் வாதிகளை விட ஒரு பொதுவான ( புத்தி ஜீவிகளையும், வல்லுனர்களையும் உள்ளடக்கிய) அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்களின் கருத்துக்களை முன்வைப்பது தான் சிறந்தது.

    ReplyDelete
  10. kuruvi சொல்வது சரியாக இருந்தாலும்,அரசாங்கம் என்ற பொறுப்போடு அரசியல் ரீதியில் பேசவேண்டியுள்ளதால் அரசியல் வாதிகள் பங்குகொள்வது இன்றியமையாது. இதில் முக்கியம் இவர்கள் ஓன்று படுவதே தவிர வேறு வழி இல்லை.அவர்களுக்கு பின்னால் இருந்து புத்தி ஜீவிகள் நல்ல சட்ட ஆலோசனைகள் வெளிநாட்டில் உள்ள சில நாடுகளில் உள்ள சிறுபான்மைகளின் உருமைகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது அதேவேளை அங்குள்ள சில சலுகைகள் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒற்றுப்போகுமா என்ற ராஜ தந்திர ரீதியான ஆலோசனைகளை நம் சமுதாயத்தில் உள்ள சகல புத்திஜீவிகளையும் ஒன்றிணைத்து ஆலோசிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  11. kuruvi சொல்வது சரியாக இருந்தாலும்,அரசாங்கம் என்ற பொறுப்போடு அரசியல் ரீதியில் பேசவேண்டியுள்ளதால் அரசியல் வாதிகள் பங்குகொள்வது இன்றியமையாது. இதில் முக்கியம் இவர்கள் ஓன்று படுவதே தவிர வேறு வழி இல்லை.அவர்களுக்கு பின்னால் இருந்து புத்தி ஜீவிகள் நல்ல சட்ட ஆலோசனைகள் வெளிநாட்டில் உள்ள சில நாடுகளில் உள்ள சிறுபான்மைகளின் உருமைகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது அதேவேளை அங்குள்ள சில சலுகைகள் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒற்றுப்போகுமா என்ற ராஜ தந்திர ரீதியான ஆலோசனைகளை நம் சமுதாயத்தில் உள்ள சகல புத்திஜீவிகளையும் ஒன்றிணைத்து ஆலோசிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  12. சுய நலத்துக்காக பிரிந்து சென்று, மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறேன் எனின்..அதிலும் சுயநலம் தானே இருக்கப்போகுது..! இருக்கிற கள நிலவரத்தைப் பார்த்தால் கிழக்கின் எழுச்சி உத்வேகம் கொண்டுள்ளதைக் காணலாம், இப்படி இருக்க ஹக்கிமோடு இணைந்துசிட்டு மீண்டும் களட்டிவிடுவதானாது..,கிழக்கை இலகுவாக கைக்குள் போடுவதற்கும் அகில இலங்கை ரீதியில் தலைவன் என்ற இடத்தினையும் இலகுவாக அடைந்துகொள்ள ஏதுவாகத்தான் அமையும். வாழ்க தலைமை

    ReplyDelete
  13. உதுக்கும் ஏதும் கொடுப்பனவுகள் வழங்க வேண்டி வருமோ தெரியல

    ReplyDelete

Powered by Blogger.