இலங்கை அரசாங்கத்துடன், மைக்ரோ சொப்ட் நிறுவனம் இணைகிறது
இலங்கை அரசாங்கத்துடன் தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தங்களில் மைக்ரோசொப்ட் நிறுவனம் கைச்சாத்திடவுள்ளதான அதன் தலைவர் ஜோன் ஃபிலிப் கோடிஸ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில், பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்காக, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தகவல் தொழிநுட்பம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளை டிஜிட்டல் மயப்படுத்துதல் போன்றவற்றுக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள தமது விசேட துறைசார் வல்லுனர்களை விரைவில் இலங்கைக்கு அனுப்பவதற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த சந்திப்பு சுவிட்ஸர்லாந்தில், டாவோஸ் நகரில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment