Header Ads



சிறுநீரக நோய் வேகமாக பரவுகிறது, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு - ரவூப் ஹக்கீம்


போலன்னறுவ, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளரென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (02) போலன்னறுவ கிங்குராகொட றோட்டுவாவ ' ஆலோஹராம விஹாரை வளாகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் (ஆர்.ஓ. இயந்திரத்தை) நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

சனிக்கிழமை மாலை போலன்னறுவை தம்பாலை கிராமத்திலும் இவ்வாறான இயந்திதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைக்க ஏற்பாடாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் இவ்வாறான நீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.


ஜெம்சாத் இக்பால்
 

No comments

Powered by Blogger.