Header Ads



டுபாய் பொலிஸாருக்கு அல்வா, கொடுத்த இலங்கையர்

சிவப்பு சந்தனக் கட்டை கடத்தல் குற்றச்சாட்டில் பொஸிஸாரால் கைது செய்யப்படவிருந்த போது தப்பிச் சென்ற இலங்கையரை, டுபாய் நீதிமன்றம் ஆளில்லா நிலையில் விசாரித்தது.

சந்தேகநபரான கடத்தல்காரர், செஞ்சந்தன கட்டைகள் கொண்ட கொள்கலனை சோதனையின்றி விடுவிக்கும்படி ஒரு டுபாய் சுங்க அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

இதற்காக 50,000 திராம் இலஞ்சம் வழங்குவதாக அவர் குறித்த அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இந்த இலஞ்ச முயற்சி குறித்து, சுங்க அதிகாரி, தனது மேலதிகாரிக்கு முறையிட்ட போது, இலஞ்சத்தை ஏற்று கொள்கலனை விடுவிப்பது போல பாசாங்கு செய்யுமாறு மேலதிகாரி கூறியுள்ளார்.

தான், 50,000 திராம் போதாது எனவும் 80,000 திராம் தருபடி கேட்க கடத்தல்காரர் சம்மதித்ததாக சுங்க அதிகாரி கூறினார்.

இதன்படி கடத்தல்காரரை கையும் மெய்யுமாகப் பிடிக்க வலைவிரிக்கப்பட்டது.

அடுத்த நாள் இருவரும் சந்தித்தனர். சந்தேகநபர், சுங்க அதிகாரிக்கு உரிய பத்திரங்களையும் இலஞ்சத் தொகைக்கான காசோலையும் கொடுத்தார்.

இதன்போது டுபாய் சுங்க அதிகாரிகள் அவரைப் பிடித்து, பின்னர் பொலிஸாரை தொலைபேசியில் அழைத்துள்ளனர்.

இக்கட்டத்தில் சந்தேகநபர், கழிவறைக்கு செல்லவேண்டியிருப்பதாக பாதுகாவலர்களிடம் கூறியுள்ளார்.

கழிவறைக்குச் சென்றவர் ஜன்னலினூடாகத் தப்பிச் சென்றுவிட்டார்.

இதனால் நீதிபதி முகமட் ஜமால், ஆளில்லா நிலையில் வழக்கை விசாரித்ததுடன், வழக்கை ஒத்திவைத்தார்.

1 comment:

  1. Ithellam Alvava....Aiyyeeee.....
    Kevalamana vela seithurukkraan....UAE la valum sri lankans ku ithu evvalavu periya vethanayum mana ulaichalum teriuma..?

    ReplyDelete

Powered by Blogger.