Header Ads



அலுவலக நேரத்தில் ஊழியர்களின் உரையாடல்களை நிறுவனம் கண்காணிக்கலாம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அலுவலக நேரத்தில் ஊழியர்களின் உரையாடல்களை கண்காணிப்பதற்கும் அதன் அடிப்படையில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், நிறுவனத்திற்கு எவ்வித தடையும் இல்லை என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரோமானியாயைவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் தான் வேலை பார்த்த அலுவலகம் ஒன்றில், அலுவலக நேரத்தில் யாகூ மெஸஞ்சர் ஊடாக, தனது தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்ட குற்றத்திற்காக கடந்த 2007 ஆம் ஆண்டு பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அதில், நிறுவனம் தனது அனுமதியின்றி தனிப்பட்ட ரகசியங்களை வேவுபார்த்து படித்துள்ளது என்றும் அது எனது அடிப்படை உரிமையை மீறிய செயல் எனவும் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார்.

இவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிறுவனம், தொழிமுறை விடயங்களுக்காக பயன்படுத்திய யாகூ மெஸஞ்சர் ஊடாக அவர் தனது சொந்த விடயங்களை பகிர்ந்துகொண்டதால், அவரது கணக்கை கையாள நேர்ந்தது என்று பதிலளித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர் அவரது பணியை முடித்துவிட்டாரா என பார்ப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் உரிமையாகும்.

ஆனால், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், எவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த வரையறைகளை தமது ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் அறிவுறுத்த வேண்டும். அது, எவ்வி தங்குதடையுமின்றி தொழிலாளர்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்ந்த தொழிலாளியின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள நீதிபதிகள், ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள வேலையை சரியாக செய்து முடித்துள்ளாரா என்று பரிசீலித்து பார்ப்பதில், எந்த தவறும் இல்லை என்றும் இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது எவ்வித தவறும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.