மௌலவி சுபியான், விடுத்துள்ள அறிக்கை..!
மீள்குடியேற்றத்திற்காக பதிவினை மேற்கொண்டவர்களும் பதியாதவர்களுக்கும் வீட்டுத் திட்டத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட நிலையில் இதுவரையில் தங்களது சொந்த மாவட்டங்களில் மீள்குடியேற்றத்திற்காக பதியாதவர்கள் தங்களது சொந்த மண்ணில் மீள்குடியேறி வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் எவ்வித தாமதமுமின்றி தாங்கள் தற்போது வாழும் பிரதேசங்களிலிருந்து பதிவினை நீக்கி.தங்களது சொந்த தாயக பிரதேசத்தில் பதிவினை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
அரசாங்கம் வடகிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் உறுதியாக இருக்கின்றது. மீள்குடியேற்றத்திற்க்காக 65 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்க்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செய்திகள் கூறுகின்றன.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் மீள்குடியேற்ற அமைச்சர், மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்களும் இடம் பெயர்க்கப்பட்ட அனைவரும் இனமத பேதமின்றி குடியேற்றப்படுவர் என உறுதியளித்துள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களில் மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியாகியிருந்தது. அதில் இதுவரையில் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்காக பதிவு செய்யப்பட்ட முஸ்லிம்களின் விபரத்தையும் வெளியிட்டுயிருந்தனர்.
இதன்படி யாழ் மாவட்டத்தில் 1465 முஸ்லிம் குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 489 குடும்பங்களம் இன்னும் மீள்குடியமர்த்தப்படாதுள்ளதாகச் சுட்டிகாட்டியுள்ளனர். இப்புள்ளிவிபரமானது அங்கு பதிவை மாத்திரம் மேற்கொண்டு விட்டு வெளிமாவட்டத்தில் வசிப்பவர்களைக் குறிப்பிடுவதாக
உள்ளது.
உண்மையில் இன்னும் பலர் பதிவை மேற்கொள்ளாவிட்டாலும் மீள்குடியேறுவதில் ஆர்வமாக இருப்பதாகவே அறிகின்றோம். எனவே இதுவரையில் மீள்குடியேற்றத்திற்காக பதிவு செய்யாதவர்களிலிருந்தால் உடனடியாகவே உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் கொள்கையின்படி காணியுள்ள அனைவருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும்.
காணியில்லாத அனைவருக்கும் அரச காணியும் வீடும் வழங்கப்படுதல் வேண்டும். எனவே தங்களது சொந்த மாவட்டத்தில் தங்களுக்கு குடியிருக்க காணியில்லாதவர்களும் தங்களுக்குக் காணியும் வீடும் வேண்டும் எனக் கோர வேண்டும்.
ஏற்கனவே மீள்குடியேற்றத்திற்க்காகப் பதிந்திருப்பவர்களில் வீட்டுத்திட்டம் இதுவரையில் கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது காணியில் தற்காலிக குடியிருப்புக்கான தடையங்கள் தெரியுமாறு செய்து கொள்வதுடன், நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது வாடகை வீட்டில் குடியிருப்பதன் மூலம் உங்களுக்கு வீடு கிடைப்பது மேலும் உறுதிப்படுத்தக் கூடியதாகயிருக்கும் மிக விரைவில் மீண்டும் மீள்குடியேற்றம் தொடர்பாக பூரணமான மீளாய்வுக் கணக்கெடுப்பு ஒன்று கிராமசேவையாளர் பிரிவுகளில்
வீடு வீடாக இடம் பெறவுள்ளது. இதில் மீள்குடியேறியவர்கள், மீள்குடியேறுவதற்க்காக பதிந்திருப்பவர்கள், மீள்குடியேற எண்ணியுள்ள அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் தங்களது பதிவுகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
அநேகமாக இது தான் இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழும் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் இறுதி வேலைத்திட்டமாக இருக்கலாம். எனவே மீள்குடியேற விருப்பமுள்ள அனைவரும் இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
தலைவர்
மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான்
மக்கள் பணிமனை.
Post a Comment