Header Ads



முஸ்­லிம்­களின் உணவை தீர்­மானிக்கும், அதி­காரம் எவ­ருக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை - ராஜித ஆவேசம்


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் மக்­களின் சாப்­பாட்டு முறை­மையைக் கூட பௌத்த தேரர்­களே தீர்­மா­னித்­தனர்.

அவ்­வாறு முஸ்­லிம்­களின் உணவு விட­யங்கள் தொடர்பில் தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் எவ­ருக்கும் தனி­யாக வழங்­கப்­ப­ட­வில்லை என  சுகா­தாரம் மற்றும் சுதேச வைத்­தி­ய­துறை  அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

இதே­வேளை, மஹிந்­தவின் அவ­தா­ரங்கள் குறுக்­கிட்டு தடுத்­தாலும் நல்­லாட்சி அர­சாங்கம் சிங்­கள மற்றும் தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­னதும் உரி­மை­களை பாது­காக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பண்­டா­ர­கம அட்டு­லு­கம பகு­தியில் இடம் பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி இடம் பெற்ற புரட்­சிக்கு இந்­நாட்டு முஸ்லிம் மக்­களே பெரும் பங்கு வகித்­தனர்.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தான் காற்றில் பறப்­ப­தாக எண்­ணிக்­கொண்­டி­ருந்தார். ஆனால் நாம் நாட்டில் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­த­வும பொரு­ளா­தார மட்­டத்தில் நாட்டு மக்­களை வலுப்­ப­டுத்­தவும் முன்­னின்று செயற்­பட்டோம்.

அதனால் சகல இனத்­த­வரும் எம்மை ஆத­ரித்­தனர்.

2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­ன­ரி­டத்தில் ஆட்சி அதி­கா­ரமே இருந்­தது. அப்­போது நாட்டைக் காப்­பாற்­றுதல் என்ற பெயரில் ராஜ­பக்ஷ குடும்­பத்தை பாது­காக்கும் செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஆனால் இன்று நல்­லாட்­சியில் அரச குடும்­பங்கள் மாத்­தி­ர­மன்றி இந்நாட்டுப் பொது­மக்களும் பாது­கா­க்கப்­ப­டு­கின்­றனர்.

ஆட்­சி­மாற்றம் இடம்பெற்­றதை தொடர்ந்து முதலில் வெள்ளை வேன் கலா­சா­ரத்­திற்கு நாம் முற்­றுப்­புள்ளி வைத்தோம். மஹிந்­தவின் காலத்தில் முஸ்லிம் மக்­களின் சாப்­பாட்டு முறை­மையைக் கூட பௌத்த தேரர்­களே தீர்­மா­னித்­தனர். அவ்­வாறு முஸ்­லிம்­களின் உணவு விட­யங்கள் தொடர்பில் தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் எவ­ருக்கும் தனி­யாக வழங்­கப்­ப­ட­வில்லை.

ராஜ­ப­க்ஷக்­களை வீட்­டிற்கு அனுப்ப வேண்டும் அவர்­களை ஆட்சி  கவிழ்க வேண்டும் என்ற நோக்கம் அன்று முதல் எனக்கு இருந்­தது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. ஆனாலும் ஏனைய மதத்­த­வரை பழி­வாங்கும் நோக்கம் மஹிந்­த­விலும் பார்க்க முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோட்­ட­பய ராஜ­ப­க்ஷ­விற்கே அதிகம் இருந்­தது.

இதனால் தான் தேசிய ஒற்­று­மைக்கு பங்கம் விளை­விக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை எம்மால் விளங்­கிக்­கொள்ள முடிந்­தது. அதனால் தேசிய ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான புரட்­சியை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டோம்.

மஹிந்­தவின் தரப்­பினர் இன்றும் முன்­னைய நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

நாம் இன்றும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். மஹிந்த தரப்பினர் குறுக்கிட்டு முட்டுக்கட்டையிட்டாலும்  சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கும் என்றார்.

6 comments:

  1. So, you mean My3 is supporter of MR...?

    ReplyDelete
  2. உங்கள் 3my அடக்கி வாசிக்க வைங்க

    ReplyDelete
  3. அவர் அப்படிச் சொல்கிறார் நீங்கள் இப்படிச் சொல்கிறீங்க.. என்னதான் நடக்குது இங்க..?

    ReplyDelete
  4. நாட்டில் மூன்றாம் தரப்பை தாண்டி நாங்காம் தரப்பு உருவாகுமோ? 1 மைத்திரி தரப்பு 2 ரணில் தரப்பு 3 மஹிந்த தரப்பு 4 வது தரப்பு யாரோ?

    ReplyDelete
  5. Enter your comment... Janathifathiyai adakki vasikkumpati maraimuhamaha solhirar.

    ReplyDelete
  6. Little Game
    நான் நினைக்கிறேன் அரசியல் யாப்பு மாற்றம் சம்பந்தமாக My3 அவர்களால் சொல்லப்பட்டபோது, இனவாதிகளால் சிங்ஹலே மற்றும் இந்த அரசு, சிறுபான்மை சமூகத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறதுதா என்ற தீயை மூட்டி வரும் நேரத்தில் , my3 இன் மாட்டிறைச்சி தடை என்ற அபிப்பிராயம் அரசியல் யாப்பை மாற்றும் வரை இந்த இனவாத நச்சுக் கருத்துக்கள்க்களை ஒழிக்க முடியும் என்ற தந்திரோபாயமாக நான் நினைக்கிறேன்.
    இருந்தும் நாம் எமது எதிர்ப்பை காட்டியே ஆகவேண்டும்.
    காரணம் முன்னால் அரசின்னால் சிறுபான்மை சமூகத்தின் கருத்து சுதந்திர அடக்குமுறைக்கு மாறாக நாம் பகிரங்கமாக எதிர்ப்பை காட்டக்கூடிய ஒரு மனநிலையை ஏற்படுத்தப்படுகிறது.
    அடுத்தபடியாக இனவாதிகள் இந்த அரசு சிறுபான்மை மக்களின் எதிர்பை எதிர்நோக்கியுள்ளதால் நாம் இந்த அரசை எதிர்கத்தேவையில்லை என்ற மனோநிலை உருவாகலாம்.
    So,பல இனவாத சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும்

    ReplyDelete

Powered by Blogger.