துருக்கி தலைநகரில் குண்டுவெடிப்பு - ரத்தவெள்ளத்தில் சிதறிக்கிடக்கும் உடல்கள்
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
புளூ மசூதியின் அருகே நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்புக்கு தற்கொலைப்படை தீவிரவாதிளே காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் ஏராளமான அவசர ஊர்தி மற்றும் மீட்புப்படை வாகனங்கள் அங்கு விரைந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஏராளமான உடல்கள் ரத்தவெள்ளத்தில் சிதறிக்கிடப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment