மீண்டும் மகிந்த ராஜபக்ச தேவை, என மக்கள் கூறுகின்றனர் - பசில் ராஜபக்ச
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதற்காக ஆரம்பிக்கப்படவிருக்கும் புதிய அரசியல் கட்சிக்கு தான் உட்பட ராஜபக்ச குடும்பத்தினரின் ஆசி கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கட்சியின் தலைவர் பதவி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர் பதவிக்கு பசில் ராஜபக்சவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பசில் ராஜபக்சவுக்கு புதிய கட்சியின் தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில் மகிந்த தரப்பினரிடம் இரண்டு விதமான நிலைப்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போடடியிட்டு, இம்முறை அந்த கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பாத உறுப்பினர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிட விரும்பாத உறுப்பினர்கள் ராஜபக்சவினர் பக்கம் தக்கவைக்கும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ச வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து வருவதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், புதிதாக ஆரம்பிக்கப்படும் கட்சிக்கு தலைமை தாங்கும் எண்ணம் தமக்கு கிடையாது எனவும் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை அந்த கட்சிக்கு தான் வழங்குவதாகவும் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆசி அந்த கட்சிக்கு இருக்கும் எனவும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கிராமங்களுக்கு செல்லும் போது மக்கள் மீண்டும் மகிந்த ராஜபக்ச தமக்கு தேவை எனக் கூறுகின்றனர்.
சில குழுவினரால் அநீதிக்கு உள்ளாக்கப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்காக கட்சி தற்போது குரல் கொடுப்பதில்லை என்று மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனால், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு பலத்தை கொடுக்கும் வகையில் புதிதாக ஆரம்பிக்கப்படும் கட்சிக்குள் செயற்பாட்டு ரீதியாக நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்.
எனினும் அரசியலில் செயற்பாட்டு ரீதியில் ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.
புதிய கட்சி மூலம் தற்போது பொது எதிர்க்கட்சியாக செயற்படும் அரசியல் சக்திகளுடன் கைகோர்த்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Where is the divineguma fund which was stolen by you? What happened to your court cases?
ReplyDeleteதிரு. பசில் அவர்களே?
ReplyDeleteஒரு மேஜிக் செய்யலாமா..?
முதலில், ஒரு காகிதமும் பேனாவும் எடுத்துக் கொள்ளுங்கள்!
அந்தக் காகிதத்தில் நீங்கள் குறிப்பிடும் 'மக்கள்' என்ற சொல்லில் அடங்குபவர்களின் பெயர்களை வரிசையாக கொஞ்சம் எழுதுங்கள்.
ஒரு பத்துவினாடிகள் கண்களை மூடிக்கொண்டிருங்கள்.
இபோது கண்களைத் திறந்து பாருங்கள்!
அட! பொலீஸ் நிதிமோசடிப் பிரிவுகளில் இதுவரை வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் மற்றும் இன்னும் வழக்குத்தொடுக்கப்பட வேண்டியிருப்பவர்களின் முழுமையான பட்டியல் உங்கள் கையில் இருக்கும்.