"மதயா" வுக்காக இறைவனிடம் கையேந்துவோம்...!
சிரியாவில் முற்றுகையில் இருக்கும் மதயா நகரில் சுமார் 400 பேர் வரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமான உதவிகளுக்கான தலைவர் ஸ்டீபன் ஓபிரைன் வலியுறுத்தியுள்ளார்.
டமஸ்கஸிற்கு அருகாமையில் இருக்கும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு நகரான மதயாவின் நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் அவசரக் கூட்டத்தை நடத்தியபோதே ஓபிரைன் இதனை வலியுறுத்தினார்.
முன்னதாக கடந்த பல மாதங்கள் அரச படையின் முற்றுகையில் இருக்கும் மதயா நகரின் 40,000 குடியிருப்பாளர்களுக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற வாகன தொடரணி கடந்த திங்கட்கிழமை அந்த நகரை அடைந்தது.
இந்த நகரில் பட்டினியால் பலர் இறந்திருப்பது நம்பகமான வட்டாரம் மூலம் உறுதியாவதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்கு பின்னர் மதயா நகருக்கு உதவி பொருட்கள் கடந்த திங்கட்கிழமையே முதல் முறை அடைந்தது. இங்குள்ள 20,000 மக்களுக்கு மாதங்களுக்கு தேவையான உணவு ஐ.நாவின் உலக சுகாதார திட்டத்தின் மூலம் அனுப்பப்பட்டது.
இதே காலத்தில் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் இருக்கும் அரச கட்டுப்பாட்டு பகுதிகளான இத்லிப் மாகாணத்தின் இரு கிராமங்களுக்கான உதவிகளை ஏற்றிய லொர்ரி வண்டிகளும் அங்கு அடைந்தன. போஹ் மற்றும் கெப்ரயா என்ற இந்த இரு கிராமங்களின் நிலைமையும் மோசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் 20,000 பேர் சிக்கித்தவிக்கின்றனர்.
ஓபிரைன் பாதுகாப்புச் சபை முன் குறிப்பிடும்போது, மதயா மருத்துவமனையில் அவசரமாக வெளியேற்ற வேண்டிய நிலையில் சுமார் 400 பேர் இருப்பதை மனிதாபிமான இணைப்பாளர் ஒருவர் உறுதிசெய்தாதாக தெரிவித்துள்ளார்.
“மருத்துவ சிகிச்சைகளை வழங்க நாம் கூடிய விரைவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் ஊட்டச்சத்தின்மை அல்லது வேறு மருத்துவ சிக்கல்களால் இறக்க நேரிடும்” என்று ஓபிரைன் எச்சரித்தார்.
இதில் நகரில் இருக்கும் சிலருக்கு அங்கிருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தமது உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேற காத்துள்ளனர்.
ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் சுமார் 44 லொர்ரி வண்டிகளில் முற்றுகை பகுதிகளுக்கு உதவிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் சிரிய செம்பிறை சங்கம் மற்றும் உலக உணவுத் திட்டம் டமஸ்கஸில் இருந்து உதவிகளுடன் கடந்த திங்கட்கிழமை மதயா நகரை அடைந்துள்ளது.
இந்த வாகனத் தொடரில் உணவு மற்றும் மருந்துகளுடன் போர்வைகள், கூடாரம் அமைப்பதற்கான உபகரணங்கள் மற்றும் சவர்க்காரம் போன்ற பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் குடியிருப்பாளர்களுக்கு இரவு வேளையிலும் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிப் பொருட்களுடன் சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பவெல் கிரிசிக் குறிப்பிடும்போது, “எதிர்ப்படும் அங்குள்ள மக்கள் ஒரு நிமிடத்திற்கு ஒரு தடைவை உணவு கொண்டுவந்தீர்களா, மருந்துகள் கொண்டுவந்தீர்களா என்று கேட்கிறார்கள். சிலர் சிரித்தபடி கையசைத்து எம்மை வரவேற்றபோதும் பெரும்பாலானவர்கள் பலவீனமான நிலையில் இருக்கின்றனர். கவலை தோய்ந்து, சோர்வாக உள்ளனர்” என்றார்.
நகரில் பசியில் இருக்கும் சிறுவர்களை கண்டதாக ஐ.நா. பணியாளர் எல் ஹில்லோ என்பவர் குறிப்பிட்டுள்ளார். ஹிபா அப்தல் ரஹ்மான் என்ற 17 வயது மதயா நகர வாசி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிடும்போது, “ஒருவர் பூனை ஒன்றை கொன்று அதனை தனது குடும்பத்திற்கு முயல் கறி என்று கூறி கொடுப்பதை நான் கண்டேன். சிலர் குப்பைகளில் உணவைத் தேடுவதோடு மேலும் சிலர் புற்களை சாப்பிடுகின்றனர். போராளிகளிடம் இருந்து நாம் உணவை பெற முயற்சித்தோம் ஆனால் ஆவர்கள் எமக்கு உணவு தர மறுக்கின்றனர்” என்றார்.
டமஸ்கஸில் இருந்து வட கிழக்காக சுமார் 25 கிலோமீற்றர் தொலைவிலும் சிரியாவின் லெபனான் எல்லையில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் மதயா நகரை அரச படை மற்றும் அதற்கு ஆதரவான லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ் கடந்த ஜுலை தொடக்கம் முற்றுகையில் வைத்துள்ளது.
இதேவேளை மேலும் 21 உதவி லொர்ரிகள் போஹ் மற்றும் கெப்ரயா கிராமங்களை அடைந்துள்ளன. இங்கு அடிப்படை உணவுப் பொருட்கள், தண்ணீர், போர்வைகள், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் மதயா நகரில் பட்டினியால் 28 பேர் இறந்திருப்பதாக எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment