Header Ads



பின்னூட்டங்கள் குறித்த விமர்சனம்..!

-MM-

இணைய தளங்களில் வரும் பின்னூட்டங்களை பார்க்கும்போதுதான் எம்சமூகத்தின் மொழி அறிவின் பரிதாபம் புரிகிறது. எம்சமூகம் (ஓரிருவரைத்தவிர) சுய சிந்தனை அற்ற, உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு மொழி அறிவின்மைதான் பிரதான காரணி.

மொழி அறிவின்றி புரிதலும் வெளிப்படுத்தலும் சிரமமே. வார்த்தைப் பயன்பாடு வாந்தி போன்றிருக்கிறது. இஸ்லாம் கூறும் நாகரீகமும் பண்பாடும் நகைப்புக் கிடமாக்கப்படுகிறது.

இதுதான் இஸ்லாம், இப்படித்தான் முஸ்லீம்கள் என்ற மாயையை ஏற்படுத்துகிறது. 

ஆங்கில பின்னூட்டங்கள்தான் சகிக்க முடியாத, எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் நிறைந்துள்ளவை என்றால் தாய் மொழியிலான தமிழ் பின்னூட்டங்கள் ஆங்கில பின்னூட்டங்களை விஞ்சிவிட்டன.

இந்த பரிதாப நிலை மாற்றப் படவேண்டும். இதற்கு முஸ்லிம் கல்விமான்கள்
இதனை ஒரு கடமையாகக் கருதி தமது பங்களிப் பினை நல்குதல் வேண்டும்.

மொழி அறிவற்ற சமூகம் முட்டாள் சமூகமாகவே கருதப்படும்.

எமது சமூகத்தை இந்த சாபக்கேட்டிலிருந்து விடுவிப்பதற்கும் இஸ்லாம் எதிர்
பார்க்கும் "முன்மாதிரியான" மனிதர்களாக மாற்றுவதற்கும், மாறுவதற்கும்
ஒவ்வொரு வரும் முன்வரவேண்டும்.

யாரொருவன் எனக்குத்தெரியவில்லை தெரிந்து கொள்ள வேண்டும் என முயல்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் அருளுண்டு. யார் எனக்கு எல்லாம் தெரியுமென எண்ணுகிறானோ அவன் பரிதா பத்துக்குரியவனே.

"சீனா சென்றேனும் ஞானம் தேட" ச்சொன்ன நபி(ஸல்) அவர்களது சமூகம் மீட்சி பெற நாமனைவரும் முயல்வோமாக.

அல்லாஹ் நம்மை பொருந்திக் கொள்வானாக.

14 comments:

  1. It is, in fact, a serious matter. Our knowledge, culture and discipline are measured through the right and beautiful usage of language. As MM pointed out, in some of the comments, Tamil spelling, wording and grammar are horrible. Please try to improve. It is important and urgent.

    ReplyDelete
  2. முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மொழியை இலக்கிய சுவையுடன் கற்றுக்கொடுப்பது என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது .அதன் விளைவே இது .

    ReplyDelete
  3. முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மொழியை இலக்கிய சுவையுடன் கற்றுக்கொடுப்பது என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது .அதன் விளைவே இது .

    ReplyDelete
  4. மறுக்க முடியாத மறைக்க முடியாத ஓர் உண்மை!

    ReplyDelete
  5. Hehe முதல்ல அந்த ஹதீஸ் சீனா சென்றேனும் ..,...... உண்மையா என்று பாருங்க.

    3611. அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

    அடுத்தது அநேகமானவர்கள் English to Tamil converter web ஐ use செய்து தான் காமன்ட் செய்கிறார்கள்.
    நீங்கள் கூறும் அந்த தமிழின் உபயோகம் பள்ளி வாழ்க்கையுடன் முடிந்துவிடும் ( ஆசிரியர்கள் , மற்றும் பத்திரிகை/books வாசிப்பை தவிர )

    So no need to make this as a big issue. As long as the reader can understand you can comment in any language. Remember language doesn't decide your tellant ( fully ).

    ReplyDelete
  6. bro voise nice comment,நானும் webconverter செய்துதான் தமிழில் எழுதுகின்ரேன் அதனால் சில எழுத்துக்கள் குரில் நெடிலாக மாற்றி எழுதவேண்டியுள்ளதும் கொஞ்ஞம் நேரம்தேவை என்பதுமேதவிர தமிழ் உச்சரிப்பு தெறியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல இதையே நேற்றுமுதல் jjயும் தூக்கிப்பிடித்து தாய்மொழிதெரியா தமிழன் என தூற்றிக்கொண்டிருந்தா அவக்கு நான் கொடுத்த பதில் கூட இனையதழத்தில் ஆசிரியறாகவும் மாணவியாகவும் செயல்பட இதுவொன்றும் பாடசாலைகிடையாது என்பதே ஆகவே இண்டர்நெட் பாவனையோடு கறுத்து எழுதிக்கொண்டிருப்பவர்கள் கொஞ்ஞம் அவசரத்தில் எழுதுவதால் விடும் பிழையே தவிர கற்றலில் தவறு எனக்கூற முயல்வது முட்டால்தனம்

    ReplyDelete
  7. பின்னூட்டங்களில் உச்சரிப்பு பிழைகளை தமிழ் படித்த பிழைகள் என்று சொல்லமுடியாது கூகூலில் எழுதும்போது பிழைகள் ஏற்படுத்துகிறது

    ReplyDelete
  8. இந்த கட்டுரை செய்திதொடர்பாக எனது தனிப்பட்ட கருத்தினையும் சொல்ல ஆசைப்படுகின்றேன் ஊடகங்கள் என்பது முக்கியமாக பத்திரிகைசெய்திகள் ஒருதருடைய வாசிப்புதிரன் அறிவுத்திரனை மேன்படுத்துவது அந்தவகையில் ஜப்னாமுஸ்லிம் இனையசெய்திகள் படிப்பவர்கள் கருத்துக்கள் கூறவும் வாய்ப்பளித்திருப்பது வரவேற்புக்குரியதாக இருக்கும் அதே வேலை உன்மையில் சாதாரனமாக வாசிக்கதெரிந்தவர்களும் இதனால் பயனடையக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அவ்வாறாவர்களை மட்டம்தட்டும் செய்திகள் பிறசுரிக்கப்படுவது ஏற்புடையதல்ல இதனால் அமெரிக்கா உத்தம் சூழும் அபாயமும் கிடையாது

    ReplyDelete
  9. பொது ஊடகத்தில் பயன்படுத்தும் மொழிநடை பற்றிய உணர்வு இங்கு பலருக்கு கிடையாது.

    கொச்சையாக பேசுவது போன்றே பின்னூட்டத்தில் எழுதவும் செய்கின்றார்கள். வீட்டில் எப்படியிருந்தாலும் பொது இடத்துக்கு வரும்போது மற்றவர்கள் முகம் சுளிக்காதவாறு ஆடையணிந்து வருகின்ற அடிப்படை நாகரீகமாவது தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா..?

    அதேபோல 'வீட்டிலே பேசுவதுபோல பொது இடத்திலும் இலட்சக்கணக்கானோர் பார்வையிடும் ஊடகத்திலும் பேசவும் எழுதவும் முடியுமா?'

    இவை பற்றிய பிரக்ஜை இல்லாதவர்கள்தான் மொழிநடை பற்றிய கவலையின்றி பின்னூட்டமிடுகின்றார்கள்.

    மொழியறிவு தேடலினாலும் தொடர்ச்சியான வாசிப்பினாலும் கிடைப்பது. அதற்கான ஆர்வமும் பொறுமையும் இல்லாத அவசரப்புத்தியுடையோருக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. செய்திப்பத்திரிகையைக்கூட படிப்பதில்லை என்பதை பெருமையாகக் கூறுகிறார்கள்.

    தற்போது பாமினி போன்ற தமிழ் எழுத்துருக்களை யுனிகோட் வடிவத்துக்கு மாற்றுவதற்கு எத்தனையோ எழுத்துரு மாற்றிகள் இருக்கின்றன. அவற்றிலும் கூட சில எழுத்துக்கள் பிழைக்கலாம். உதாரணமாக 'வு' என்பது 'வூ' என்று சிலவேளை வரலாம். ஆனால் அதையே சாக்காக வைத்து ர-ற, ண-ன, ல-ள-ழ, போன்ற எழுத்துகளைத் பிழையாகப் பொறித்துவிட்டு 'நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாட்டு' எனும் விதமாக வெட்கமின்றி பொய் கூறும் நபர்கள் இந்தச் செய்திக்கான பின்னூட்டத்தில்கூட தப்பும் தவறுமாக கொச்சையாக பின்னூட்டமிட்டுள்ளதைக் காணலாம்.

    இந்த சாதாரண விடயத்திற்கே உண்மையை திரித்துக் கூறும் இவர்களெல்லாம் பின்னூட்டங்களிலே போடுவது 'மார்க்கக் காவலர்கள்' வேடம்.

    நினைத்துப் பார்த்தால் சிரித்து வயிறுபுண்ணாகிவிடும்!

    ReplyDelete
  10. Just to add, Don't forget the Auto Correction on the phone. Because of this feature also people do mistakes. Here is a small joke about that feature.

    man received the following text from his neighbor:
    “I am so sorry Charlie. I've been riddled with guilt and I have to confess. I have been tapping your wife, day and night when you're not around. In fact, more than you. I'm not getting any at home, but that's no excuse. I can no longer live with the guilt and I hope you will accept my sincerest apology with my promise that it won't happen again.”
    The man, anguished and betrayed, immediately went into his bedroom, grabbed his gun, and without a word, shot his wife and killed her.
    A few moments later, a second text came in: “Damn auto correct. I meant ‘WiFi’ not ‘wife’.”

    ReplyDelete
  11. அடடா பொது ஊடகங்களில் எப்படி கமெண்ட் பண்ணுவது என்று சொல்லிதர வந்திருக்கும் அம்மையார், அவர் உபயோகிக்கும் வார்த்தைகளை மறந்து விட்டார் போலும். அம்மா தாயே நீங்கள் சினிமா வேப்சிடேகளில் அடிக்கும் அரட்டையை விட நாங்கள் எவ்வளவு எழுத்து பிழைகளுடன் எழுதினாலும் பரவாயில்லை.
    மற்றது அவருக்கு எங்கள் எல்லோரது மனதையும் பத்தி தெரியும் போல அதுதான் '' மார்க்க காவலர் வேடம்'' போடுகிறோம் என்கிறார்.
    அது எதற்கு வேடம் போடுவது அம்மா ? உங்களிடமிருந்து ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்கவா? அல்லது பணம் கிடைக்கும் என்று எதிர்பார்கவா ?
    உங்களுடைய கமெண்ட்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை வாசிதுப்பருங்கள். எப்போதுமே அடுத்தவரை ( விசேடமாக அரபு இஸ்லாமியர்கள்/இஸ்லாமிய ஆண்களை) குறை கூறிக்கொண்டே இருக்கின்றீர்கள்.
    Please consult a Psychiatric. Looks like you had a bitter childhood, specially with men.

    ReplyDelete
  12. வேலையில்லா பட்டதாரி வீட்டில் இருந்து தம்பட்டம் அடித்துக்கொள்வது மட்டுமே தவிர வேறு எதுவும்கிடையாது முறைப்பாடு எழுதி பிட்டிசமடிப்பதற்கு இதுவொன்றும் அரசியலும் கிடையாது வீட்டில் இருந்து சரிபிழைபார்த்து திருத்துவதற்கு வினாதாலும் கிடையாது நீங்களே எத்தனையிடத்தில் பிழைவிட்டுள்ளீர்கள் என்பதை மீன்டும் ஒருதடவை உங்ககருத்துக்களை படித்துபார்த்தால் தெரியும்[பிரக்ஜை]என்னையா?ராசா சொல்லவந்தது[பிரக்ஞை]தானே? அடக்கமுடியல்லையா......

    ReplyDelete
  13. Comments mattum illa neraya article e appidithan irukku

    ReplyDelete
  14. எழுதுபவர் பிழை செய்கிறார் என்றால், பத்திரிகாசிரியர்கள் அந்தப் பின்னூட்டங்களை தெரிந்து தங்களது பத்திரிகைகளில் இடாது தவிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது அவற்றை பிழை திருத்தம் செய்து இட வேண்டும். எழுதுபவர்களை நிறுத்த இனி எப்படியும் முடியாது. எனவே இது ஒவ்வொரு பத்திரிகையும் பொறுப்பேற்க வேண்டிய பாரிய ஒரு தனிப்பட்ட விடயமாகும். (இங்கு Face Book போன்றவற்றை பொருட்படுத்த அவசியம் இல்லை). போதாக் குறைக்கு தங்களது வம்பு வாதங்களை ஒருவருக் கொருவர் சாடிக் கொண்டு இங்கேயும் அலங்கரிக்கிறார்கள். ඔක්කොම යන්නේ දේවාලේ... අපිත් යන්නේ ඒවාලේ..!

    ReplyDelete

Powered by Blogger.