இலங்கையில் ஷியாயிஸமும், சமூக முரண்பாடும்..!
-எஸ் .எம் .மஸாஹிம்-
இலங்கையைப் பொறுத்தவரையில் தரவுகளின் பிரகாரம் பார்க்கும்போது இலங்கையில் அதிகார மட்டத்தில் ஈரான் அதன் செல்வாக்கை செலுத்தி வருவதன் காரணமாக ஷீயா கோட்பாட்டை நாட்டில் வலுவாக காலூன்றமுயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளது , குறிப்பாக நாட்டில் ,அரசியல் , பொருளாதார ,சமூக தளங்களில் ஈரான் சம்பாதித்துள்ள நற்பெயரை சாதகமாக பயன்படுத்தி ஷீயாயிஸத்தை நாட்டில் உறுதியாக விதைத்து வருகிறது.அதேவேளை உள்நாட்டு முஸ்லிம்களின் நலன்களிலும் அதன் அக்கரை வெளிப்படுத்தப் பட்டுள்ளது
இந்த நிலையில் ஷீயா-கோட்பாடு சார்ந்து முஸ்லிம் சமூக மட்டத்தில் ஏற்படுத்தப்படும் அல்லது ஏற்படும் அதிர்வுகளை அது ஒரு பிரச்சினையே அல்ல என்பதும் போன்று அணுகுவதும் , மறுபக்கத்தில் குறித்த பிரச்சினையின் அளவை விடவும் அதை மிகப் பெரிதாக மிகைப்படுத்தி பிழையாக கையாள முற்படுவதும் மிகவும் தவறானதாகும். சவூதியும் -ஈரானும் பஹ்ரைன், யமன் , சிரியா ஆகிய நாடுகளில் அரசியல் , இராணுவரீதியில் மோதிக்கொள்ளும் இந்த சூழலில் நம் நாட்டிலும் ஷியா கோட்பாடு தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்தாடல்களின் அவைகளின் தாக்கம் வெளிப்படுகிறது. தற்போதைய ஷியா மீதான அதீத கவனத்தை சர்வதேச அரசியல் நிலவரமே தீர்மானிக்கின்றது அப்படி இல்லையென்றால் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள காதியாணிகள் தொடர்பாகவும் சூடான பதிவுகள் இடம்பெறவேண்டும் ஆனால் அப்படி இப்போது இடம்பெறுவதாக தெரியவில்லை. சர்வதேச அரசியல்தான் நம் நாட்டிலும் சட்டியை சூடாக்கியுள்ளது என்பது தெளிவு .
இலங்கை என்று வரும்போது இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம் சிரியாவிலும் , யெமனிலும் , பஹ்ரைனிலும் ஈரான் வெளிப்படுத்தும் அரசியல் நிலைப்பாடு எமது ஊர்களில் இருக்கும் ஷியாபிரிவு மக்களை அணுகும் விசயத்தில் அரசியல் ரீதியிலான தாக்கத்தை செலுத்தக் கூடாது என்பதுதான் , ஆனால் அரசியல் தவிர்த்த ''ஷியா-தத்துவம்'' தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்தாடல் என்ற எல்லைக்குள் உட்பட்டவகையில் பொருத்தமான தளத்தில் ,உரிய முறையில் கருத்து மரிமாற்றங்கள் , தெளிவுரைகள் என்பன மிக அவசியமானதாகும் . முன்னணி பிரதான அறிஞர்கள் ஷியாக்களை முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கமாகவே பார்கின்றார்கள் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும் . ஆக இந்த விடயத்தில் எல்லைகளை தண்டாத அணுகுமுறைகள் நம் நாட்டுக்குள் அவசியமாக உள்ளது .
அரசியலில் ரீதியில் ஈரானின் நிலைப்பாடு மோசமானது ஆனால் நாட்டினுள் அவர்களை அரசியல் நோக்கில் அணுகவேண்டிய தேவை இல்லை அவர்களை கோட்பாட்டு ரீதியில் அணுகி தெளிவுகளை வழங்குவதும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது என்பதும் அவசியமானது என்பது போன்று அந்த அறியாமைவாதம் பரப்பப்படுவதையும் அறிவியல் பூர்வமாக எதிர்கொள்வதும் அவசியமாது .
ஈரானிய ஷியாயிஸம் : மேற்கின் விஷ விளையாட்டும்
ஷியாயிஸம் வெளிப்படுத்தும் சமயக்கோட்பாடு மற்றும் அந்த வகுப்பினரின் அரசியல் நடவடிக்கை ஈரானின் அரசியல் நகர்வு என்று பார்க்கும்போது சர்வதேச அளவில் ஷியாயிஸம் அதன் செல்வாக்கை பல சர்வதேச நாடுகளின் நிலைநிறுத்தி வருகின்றது. ஈரான் மேற்கொள்ளும் அரசியல் நகர்வுகள் எகிப்தின் சர்வாதிகாரி சிஸி தவிர்ந்த மற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அரசியல் ரீதியில் பெரும் பிரச்சினையாகவே உள்ளது.ஷீயா கோட்பாடு அல்லது ஷீயா மத்ஹப் என்பது தவறான அரசியல் வழிகாட்டல் ,விளக்கம் மற்றும் புரிதல் கொண்டு உருவாக்கப்பட்டு கால மாற்றத்தில் பல மோசமான வழிதவறிய மதப்பரிமானங்களை தன்னிடத்தில் ஏற்படுத்துக்கொண்டுள்ளது என்பதில் கருத்து முரண்பாடுகள் இன்றி ஒட்டு மொத்த முன்னணி ஸுன்னா இஸ்லாமிய அறிஞர்களும் உடன்படுகிறார்கள் ,
இது இப்படி இருக்க , இன்று ஷீயா- ஸுன்னா முரண்பாட்டை சியோனிச பின்புலம் கொண்ட மேற்கின் முதலாளித்துவ அரசியல் பூதாகரமாக்கிவருகின்றது என்பதும் அதன் வெற்றிகர செயல்முறை காரணமாக முஸ்லிம் உம்மா தனது பொது எதிரியை மறந்துபோகும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது என்பதையும், இதை நுட்பமாக கையாளலும் ரஷ்யா உட்பட்ட உலக வல்லாதிக்கங்கள் முஸ்லிம் உம்மாவை இன்னும் பல சதாப்பதங்களுக்கு மீளமுடியாதவாறு சகோதரத்துவ யுத்தத்தில் சிக்க வைத்துவிடவும் இது வரை அடைய முடியாது இருந்த மேலும் பல நலன்களை அடைந்து கொள்ளவும் முயன்ருவருவதை நாம் அவதானிக்கிறோம்.
தமக்கு லாபகமான முறையில் மத்திய கிழக்கில் இருந்து அள்ளிச்செல்லும் பெற்றோலியத்தின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் தமது பணத்தை மீண்டும் தம் பக்கம் சுழலச் செய்ய ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றன .ஆக மொத்தத்தின் மேற்கு வல்லாதிக்கம் பணத்துக்காக யுத்தத்தை விதைத்து பணத்தை அறுவடை செய்கிறது .அழிவை மட்டும் முஸ்லிம் உம்மாவுக்கு கொடுத்து விடுகிறது .
இங்கு ''முஸ்லிம் உம்மா '' என்ற பதத்தை முறையாக வரைவிலக்கணப்படுத்தி கொண்டாள் எமது அரசியல் எதிரி யார் என்ற விடையை கண்டு கொள்ள முடியும் ஆனால் அதில்தான் இப்போது சர்ச்சையே கிழப்பியுள்ளது அதனால் எமது எதிரி யார் நண்பர்கள் யார் என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது ,
நசுக்கப்படும் இஸ்லாமிய சக்திகள்
சிரியாவில் நான்கு ஆண்டுகளாக நடாத்தப்படும் யுத்தம் சுமார் இரண்டு இலட்சத்தி எழுபதினாயிரம் உயிர்களை பலியெடுதுள்ளது, சிரியாவின் முழு கட்டமைப்பும் செயலிழந்துள்ளது யுத்த கட்டமைப்பு மட்டும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு கொண்டுள்ளது , ஈரானின் தலையீடு இருந்த்திருக்கா விட்டால் உள்நாட்டு போர் தொடங்கி சில மாதங்களியேலே பஸார் அல் அசாத் அரசு வீழ்த்தப்பட்டிருக்கும் என்ற வாதத்தில் நிறையவே உண்மையுண்டு , அப்படியானால் ''இஸ்லாமிய தேசம்'' என்ற அமைப்பும் அங்கு ஆதிக்க சக்தியாக மாறுவதற்கு ஈரானின் தலையீடு பெரிதும் உதவியுள்ளது அமெரிக்கா தலைமயிலான மேற்கு வல்லாதிக்கம் சவூதி தலைமையிலான கூட்டணியை உருவாக்கி பயன்படுத்தவும் , ரஷ்யா வல்லாதிக்கம் உள்நுளைந்து அனைத்து போராளிகளையும் பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தி அழிக்கவும் இந்த தலையீடு பெரிய காரணமாகியுள்ளது.
இப்போது அங்கு ஷீயா -ஸுன்னா என்ற வகுப்புக்கள் யுத்தத்தை தீவிரப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது , சுயநலமற்ற இஸ்லாத்தை நேசிக்கும் பல்லாயிரக் கணக்கான போராளிகள் கொன்று குவிக்கப் படுகிறார்கள் உலகம் பூராகவுமுள்ள உணர்வுள்ள துடிப்பான இஸ்லாமிய வாலிபர்களின் புதை குழியாக சிரியா இன்று மாற்றப்பட்டுள்ளது , சிரியாவில் பலராலும் எதிர்பார்க்கப் பட்ட ''கிலாபா'' உருவாக்கப்பட்டு விடாமல் இருக்க மேற்கு வல்லாதிக்கமும் , ரஷ்யா வல்லாதிக்கமும் அவர்களின் ஏஜெண்டுகளான முஸ்லிம் நாடுகளின் பல சர்வதிகரிக்ளும் முழுஅளவில் பங்களிப்பு செய்து வருகின்றார்கள் என்பது கசப்பான உண்மை , ஆக மொத்தில் சிரியாவின் வீதிகளில் உடைக்கப்படுவது முஸ்லிம் உம்மாவின் முதுகெலும்பு
shia is not a 'madhab'. they dont believe our quran or hadees. we must understand shias have many sects. so now politics playing a diffrent
ReplyDeletegame wether they may be sunnis or shias , they are distroing islam for power.the only way for us is to fallow allah rasool sahabah salafussaliheen and madhab.if we undarstand this we can clearly know who is our enemy.
முன்னனி உலமாக்கல் ஷிஆவை இஸ்லாத்தின் ஓர் அங்கமாகவே பார்க்கின்றனர் என்ற கருத்தை விதைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
ReplyDelete