Header Ads



ஞானசாரர் சார்பில், பிணை மனு தாக்கல்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சார்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, நீதவானால் உத்தரவிடப்பட்டது. 

இதன்படி கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.