Header Ads



ஞானசாரரின் கைதை தடுக்க முயற்சி, பிணையில் எடுக்கவும் முக்கிய சட்டத்தரணிகள் தயார்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகமை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே ஞானசார தேரர் 26-01-2016 கைது செய்யப்படும் பட்சத்தில் அவரை உடனடியாக பிணையில் எடுக்க இலங்கையின் முக்கிய சட்டத்தரணிகள் பலர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த சட்டத்தரணிகள் மற்றும் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் ஆகியோர் ஞானசார தேரர் கைது செய்யப்படாமல் தவிர்ந்து கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

4 comments:

  1. நாட்டில் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்ற சட்டத்தை விட்டுவிட்டு பிக்குகளின் அதிகாரத்தை குறைக்கவேண்டும்

    ReplyDelete
  2. பகிரங்கமாகவே ஒரு குற்றவாளியாக இருந்தும், மதவெறியனாக இருக்கும் பட்சத்தில் நீதியில் இருந்து தப்பி விடலாம் என்று ஒருவன் நினைக்குமளவுக்கு இந்த சமூகத்தில் மதவெறியும் மதத்தின் பெயரால் நிகழும் மூடத்தனமும் இருப்பதை என்வென்று சொல்வது..?

    ReplyDelete
  3. Ms Jesslya Jeslly... he is not a maza veriyan. avan maza veriyanaka irundal.. avan avanudaya mazattaye ivvaru kevalappadutta maataan.
    ivanal nalla sinhala sahodararkalukkum ketta peyar... ivan tandikkappada vendiyavan.

    ReplyDelete
  4. ஆம் மத வெறியனல்ல.மட சாம்பிரானி

    ReplyDelete

Powered by Blogger.