அழிக்கப்பட்ட யானைத் தந்தங்களும், சில முக்கிய விளக்கங்களும்..!
-பேட்டியின் தமிழ்வடிவம் GTN-
இலங்கை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் மறைத்துவைக்கப்பட்டிருந்த யானைதந்தங்களை கைப்பற்றிய வேளை முன்னைய அரசாங்கத்தின் கீழ் சில நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்ததாக இலங்கை சுங்கத்தின் பிரதி இயக்குநர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார். குளோபல் பிரெஸ் ஜேர்னலிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
கேள்வி - இந்த யானை தந்தங்களை எப்போது கண்டுபிடித்தீர்கள்?
பதில்- கப்பலில் எடுத்துசெல்லப்பட்டுக்கொண்டிருந்த யானைதந்தங்களை 2012 மே மாதம் 12 ம் திகதி நாங்கள் கண்டுபிடித்தோம், குறித்தகப்பல் அவசரமாக கொழும்புதுறைமுகத்திற்குள் நுழைந்தவேளை இது தெரியவந்தது, இந்த யானைதந்தங்கள் கருவாட்டு தூள்கள் காணப்பட்ட மூன்று கொள்கலன்களிற்குள் காணப்பட்டன,மோப்பநாய்கள் அதனை கண்டுபிடிக்காமலிருப்பதற்காக கடத்தல்காரர்கள் அவ்வாறு செய்திருந்தனர். பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்டு மத்தியில் தந்தங்கள் காணப்பட்டன. ஸ்கானர் தந்தங்கள் இருப்பதை கண்டுபிடித்தது ஆனால் அவர்கள் அது மீள்சுழற்சிசெய்ய கூடிய பிளாஸ்டிக் என தெரிவித்தனர்.
கேள்வி - இந்த தந்தங்களை எங்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்,கொழும்பில் அவை எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன?
பதில்-குறிப்பிட்ட கப்பல் கென்யாவிலிருந்து துபாய்க்கு சென்றுகொண்டிருந்தது,கொரியாவில் உள்ள பிராந்திய அலுவலகமொன்று அளித்த தகவலின்படி கப்பல் கைப்பற்றப்பட்டது.
கேள்வி- இலங்கை தந்தங்கள் மற்றும் பலவித உயிரினங்கள் கடத்தலிற்கு பிரபலமான நாடா?
பதில்-இவ்வளவு பெருந்தொகை தந்தங்களை நாங்கள் கைப்பற்றியது இதுவே முதற்தடவை,இதன் பின்னர் கடந்த சில வருடங்களாக கொழும்பில் பெரியளவில பல்வித உயிர் இனங்கள் கடத்தப்படுவதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்,கடத்தல்காரர்கள் இலங்கையை தவிர்க்க முயல்கின்றனர்,
கேள்வி- இவ்வாறான கடத்தல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
பதில்- ஸ்கானர்களையும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தவேண்டும்,பிராந்தியநாடுகள் மத்தியில் அதிகளவு ஓத்துழைப்பும் ஓருங்கிணைப்பும் காணப்பட்டால் இவ்வாறான கடத்தல்களை கண்டுபிடிக்கலாம்.மேலும் கடுமையான சட்ட அமுலாக்கலும் அவசியம்.
கேள்வி - மூன்று வருடத்திற்கு முன்னரே இந்த தந்தங்களை கண்டுபிடித்துவிட்டீர்கள். ஏன் இந்த தாமதம்?
பதில்-நாங்கள் கென்யா அதிகாரிகளுடன் ஓருங்கிணைந்து செய்ற்பட வேண்டியிருந்ததாலும் துபாய் வரை சென்று தகவல்களை பெறவேண்டியிருந்ததாலும் விசாரணைகளை பூர்த்திசெய்வதற்கு அதிக காலம் எடுத்தது,கப்பல் புறப்பட்ட நாட்டிலிருந்து தகவல்கள் தாமதமாகவே கிடைத்தன, இன்டர்போலும் இதில் தலையிட்டது,ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காரணமாகவும் தாமதங்கள் ஏற்பட்டன,மேலும் நாங்கள் இவற்றை அழிப்பதற்கு உரிய வழிவகைகளை கண்டுபிடிக்கவேண்டியிருந்தது.
கேள்வி- முன்னரும் தந்தங்களை அழிப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்றனவா?
பதில்-உள்ளுரில் அரசியலவிவகாரங்கள் சில காணப்பட்டன, ஜனாதிபதி செயலகத்திடமிருந்து தந்தங்களை கொழும்பு லொஜிஸ்டிக்சிடம் ஓப்படைக்குமாறு உத்தரவு வந்தது,இலங்கை சுங்கம் அதனை எதிர்த்ததுடன்,சர்வதேசட்டங்களை பின்பற்றியது.
கேள்வி-ஏன் கோவில்களும் இதனை நிராகரித்தன?
பதில்-அதன் பி;ன்னர் தந்தங்களை கோவில்களிற்கு வழங்கதீர்மானிக்கப்பட்டது,எனினும் தந்தங்களிற்காக யானைகள் கொல்லப்பட்டதால் அவர்கள் அதனை நிராகரித்தனர்,பௌத்த மதம் யானைகளை கொல்தை பொறுத்துக்கொள்வதில்லை.
கேள்வி-இலங்கையிலும் தந்தங்களிற்காக யானைகள் கொல்லப்படுகின்றனவா?
பதில்-இலங்கையில் அவ்வளவு அதிகமான யானைகள் இல்லை,எப்போதாவது மாத்திரம் இது இடம்பெறுகின்றது,காடழிப்பு காரணமாக ஏற்படும் யானை மனிதன் மோதல் மாத்திரமே காணப்படுகின்றது. கேள்வி- யானைதந்தங்களை அழிப்பதை இவ்வாறுபாரிய நிகழ்வாக நடத்தவேண்டுமா?
பதில்-எங்களிற்கு வெளிப்படை தன்மை அவசியம், இலங்கை சர்வதேஅளவில் தன்னை பற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள அபிப்பிராயத்தை மாற்றவேண்டும்,சர்வதே உடன்படிக்கைகள், பிரகடனங்களை நாங்கள் பின்பற்றவேண்டும்,மேலும் இது கடத்தல்காரர்கள் போன்றவர்களின் நடவடிக்கைகளை குறைக்கும்,
Post a Comment