பிக்குகளுக்கு ஒழுக்கவியல் சட்டம் போன்று, ஏனைய மதங்களுக்கும் சட்டம் வேண்டும் - சுஜீவ சேனசிங்க
- MM.Minhaj-
பிரச்சினைகள் இல்லாத நாடாக இலங்கை உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இனங்களுக்கு மத்தியில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டியதில்லை. ஆகையால் இனவாதம் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டுமாயின் பிக்குகளின் ஒழுக்கவியல் சட்டம் மிகவும் அத்தியாவசியமாகும். அதேபோன்று ஏனைய மதங்களுக்கு இது போன்ற சட்டம் உருவாக்க வேண்டும் என சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தில் மௌனியாக செயற்பட்டுக் கொண்டு அபயராமவில் சத்தம் போடும் நபராக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மாறியுள்ளார். இவர் அரசியலமைப்பு தொடர்பில் மிகவும் கேளிக்கையான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்த வண்ணம் உள்ளார்.
நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசியலமைப்பு உகந்தது அல்ல. 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியின் போது இலங்கையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன. ஆகவே இதற்கு ஏற்றாற் போலவே அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டன.
திறந்த பொருளாதார கொள்கை , மகாவலி துரித அபிவிருத்தி திட்டம் போன்றவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பொருளாதாரம் நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நவீன யுகத்திற்கு ஏற்றாற் போல் இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. தற்போதைய அரசியலமைப்பினை திருத்தங்கள் செய்வதில் அர்த்தமில்லை. முழுமையாக அரசியலமைப்பு மாறவேண்டும்.
கடந்த வருடத்தின் போது நல்லாட்சிக்கான அத்திவாரத்தை இடுவதற்கான வேலைத்திட்டத்தையே எமது அரசாங்கம் முன்னெடுத்தது. திட்டமிட்டதனை போன்று நல்லாட்சிக்கான அத்திவாரத்தை இட்டுள்ளோம். தற்போது மக்களுக்கு அனைத்து ஜனநாயக சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த வருடத்தினை இலங்கையின் முதலீட்டு மையமாக்கும் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
பிக்குகள் ஒழுக்கவியல் சட்டம்
இதேவேளை தற்போது பிக்குகள் மீதான ஒழுக்கவியல் சட்டம் உருவாக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். நாட்டில் பிக்குகளை கட்டுப்படுத்துவதற்கு மகா சங்கப்பீடத்தினாலேயே முடியும். எனினும் மகா சங்கபீடமும் பிக்குகளின் ஒழுக்கவியல் தொடர்பில் சட்டத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.
பிக்குகளுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க முடியாது. சாசனத்தின் பிரகாரம் பிக்குகளின் செயற்பாடுகள் எதிராக இருப்பின் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆகவே இதனையே நாம் முன்னெடுக்கவுள்ளோம். அதுவும் சங்கபீடத்தின் உதவியுடனேயே முன்னெடுக்க உள்ளோம். இல்லையேல் தேவையற்ற கலவரங்களும் பௌத்த சாசனத்தின் மீது மக்கள் அதிருப்தியும் உருவாகும். தற்போதைக்கு பிரச்சினைகள் இல்லை. இனிமேலும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு அவசியமில்லை.
ஆகவே இனவாதம் உள்ளிட்ட சில செயற்பாடுகளை மையமாக கொண்டு பிக்குகளுக்கு ஒழுக்கவியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். பௌத்த பிக்குகளுக்கு மாத்திரம் உருவாக்கப்பட வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஏனைய மதங்களுக்கும் இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நீங்க மஞ்ச நிர நாய கட்டிபோடுங்க சார் அது எல்லா இனமனிதரையும் கடிக்குது
ReplyDeleteok nallathu ella matha kuruwukkum kondu waruwom sattam ellorukkum saman yaar kutram saithaalum thappuththaan athil matrukkaruththu illai ok
ReplyDelete