நாடளாவிய ரீதியில், எலிக் காய்ச்சல் பரவிவருவதாக எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் எலிக் காய்ச்சல் தற்போது பரவி வருவதன் காரணமாக, விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த எலிக்காய்ச்சல் அதிகம் பரவி வருவதாக, அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து இதுவரைக்கும் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாயிகள், வடிகால்களை சுத்தம் செய்பவர்கள், சுரங்கங்களில் வேலை செய்பவர்கள், சதுப்பு நிலங்களில் பணியாற்றுபவர்கள், கால்வாய்கள் மற்றும் அசுத்தமான நீரில் நீச்சலடித்து விளையாடுபவர்கள் போன்ற அனைவரும், அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் மாத்திரையை வாங்கி உட்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அவரவரது பணிகளுக்குச் செல்லும் முன்னர் இரு மாத்திரைகளையும் வேலையின் போது சிறிதளவு நீரை அருந்துவதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை, குறித்த நோய் பரவுவதை 90 சதவீதத்தில் பாதுகாக்கும் என்றும் தினமும் இந்த முறைமை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல் அல்லது லேசான காய்ச்சல், உடல் குளிர்தல், கண் வெண்மையாதல், இடுப்பு மற்றும் சில பகுதிகளின் தசை மென்மையாதல், கடுமையான தலைவலி மற்றும் சிறுநீர் வெளியேறுவது குறைவாக இருத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடியும். இந்தக் காய்ச்சல் கடைசிக்கட்டத்துக்குச் சென்றால், இருதயம் செயற்படாமை மற்றும் பல்வேறு உடற்சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நோயாளியை காப்பாற்றுவது கடினமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This is very danger
ReplyDelete