Header Ads



மகிந்த தங்கவிருந்த மாளிகையில், அமானுஷ்ய சக்திகள் கொண்ட பிரமிட்கள் - உரிமையாளர் தகவல்

ராஜகிரியவில் அமைந்துள்ள ஏ.எஸ்.பி.லயனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகையில் மர்மங்கள் நிறைந்த பிரமிட்டுக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாளிக்கையின் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான ஏ.எஸ்.பி.லயனகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணலில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளர்.

இந்நிலையில், மாளிகையினுள் அமானுஷ்ய சக்திகள் கொண்ட பிரமிட்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த பிரமிட்டுகள் பொருத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கட்டடக் கலையினர் மற்றும் அமானுஷ்ய விஞ்ஞானிகளின் ஆலோசனைக்கமை பீகொக் மாளிகையில் அமானுஷ்ய சக்தி கொண்ட பிரமிட்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடியேற திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னரான காலப்பகுதியில் இந்த பிரமிட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக குறித்த மாளிகையில், குடியேறிய பின்னர் அங்கு வருபர்களை சந்திப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இடத்தில் மேலும் விசேட அமானுஷ்ய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வருபவர்கள் அவர் என்ன கூறினாலும் அதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கான சக்தி கொண்ட அமானுஷ்ய சக்தி உள்ளடங்கிய பிரமிட்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதனை பொருத்திய அமானுஷ்ய வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.

பீகொக் மாளிகையில் மஹிந்த குடியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் அந்த மாளி்கையில் குடியேறியிருந்தால், மீண்டும் ஒரு முறை மிக குறுதிய காலப்பகுதியினுள் அவர் இழந்த அதிகாரம் உட்பட அனைத்து நன்மைகளையும் பெற்றுகொண்டு சக்தி வாய்ந்த ஒரு நபராகுவதற்கு வாய்ப்பிருந்ததாகவும், ஏ.எஸ்.பீ.லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில் லியனகே இந்த தகவல்களை வெளியிட்டார்.

2 comments:

  1. Aiyooda....ippavaum inta Mahinda ippdiyellam namburaare.... Mokka mokka...Amaanushattai nambi naattai aandaal atho kathithaan....ellame amaanushamaaha maari vidumo...??

    ReplyDelete
  2. யாராவது எனக்கு கிச்சி கிச்சி மூட்டுங்க சிரிக்கிரதுக்கு

    ReplyDelete

Powered by Blogger.