Header Ads



தீவிரவாத பௌத்த பிக்குகளை, தண்டிக்குமாறு கோரிக்கை

தீவிரவாத பௌத்த பிக்குகள், ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம் கண்டித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கின் போது நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை விடுவிக்கக்கோரியே நேற்று முன்தினம் பிக்குமாரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது பிக்குமார் நீதிமன்ற வளவுக்குள் முறைதவறி நடந்து கொண்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல்களை நடத்தினர்.

இந்தநிலையில் குறித்த நடவடிக்கையில் ஈடுபபட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.