உலகின் மிகப்பெரிய நீல இரத்தினத்தை வெளிநாடு எடுத்துச்செல்ல முயற்சி - முறியடிக்க விசேட பாதுகாப்பு
உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக் கல் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரகசியமான முறையில் குறித்த இரத்தினக் கல்லை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியை முறியடிக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இரத்தினக்கல் அதிகாரசபையின் தலைவர் அசாங்க வெலகெதர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரியதும் விலை அதிகமானதுமான இரத்தினக் கல்லின் உரிமையாளரின் அடையாளத்தை வெளிப்படுத்தப் போவதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு விபரங்கள் வெளியிடப்படாது.
அநேக சந்தர்ப்பங்களில் இரத்தினக்கல் அதிகாரசபைக்கு அறிவிக்காமல் பெறுமதியான இரத்தினக்கற்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றது.
இந்த நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்தையும், இரத்தினக்கல் வியாபாரத்திற்கும் பாதகத்தன்மையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய நீல இரத்தினக் கல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 4200 கோடி ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment