Header Ads



"சிங்­க இரத்தம் என சொல்லிக்கொண்டு, இரவில் நரியாக செயல்­படுவது சிங்­களவருக்கே அவ­மா­ன­ம்"

- எம்.ஆர்.எம்.வஸீம் + Vidi)

சிங்ஹ லே என்று சொல்லிக் கொண்டு இரவு நேரங்­களில் நரித் தன­மாக செயல்­படும் சிலரால் சிங்­கள இனத்­துக்கே அவ­மா­ன­மாகும் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், 

‘சிங்­ஹ லே' என்ற ஓர் இனம் தெரி­யாத குழு­வொன்று தற்­போது நாட்­டுக்குள் இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயல்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. இது குறித்து அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். '

‘சிங்­ஹ லே’ என்றால் சிங்­கத்தின் இரத்தம்.  அப்­ப­டி­யென்றால் இவர்­க­ளது செயற்­பாடு சிங்­கத்தைப் போன்று உறுதி மிக்­க­தாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் எலி, நரி­களைப்  போன்று இரவு நேரங்­களில் கள்­ளத்­த­ன­மாக செயற்­ப­டு­கின்­றனர்.

இது நாட்­டுக்குள் வீண் பிரச்­சி­னை­க­ளையே ஏற்­ப­டுத்தும். அத்­துடன் அண்­மையில் இவர்கள் நுகே­கொடை பகு­தியில் உள்ள முஸ்லிம் வீடு­களில் ‘சிங்­ஹ லே’ என்ற வாசகத்தை எழுதி சென்­றுள்­ளனர்.

முஸ்­லிம்­க­ளுடன் இவர்­க­ளுக்கு ஏதேனும் பிரச்­சினை இருந்தால் அதை நேரில் சென்று பேசி முடித்துக் கொள்ள வேண்டும். மாறாக இரவு நேரங்­களில் நரித்­த­ன­மாக செயல்­படக் கூடாது. இவர்­களின் கள்­ளத்­த­ன­மான செயற்­பா­டா­னது முழு சிங்­கள இனத்­துக்கே அவ­மா­ன­மாகும். 

5 comments:

  1. Honest Politician ? Do they really exist ?

    ReplyDelete
  2. well said Paku Sakotharaya... Thank you so much and appreciate for your voice for human rights especially minorities. We salute you sir....

    ReplyDelete
  3. நாட்டுபற்ருள்ளவர்கள் இவாரான நடுநிலை சிந்தனையாலர்களாகவே எந்தவொருவிடயத்தினையும் கையாலவேன்டும் ஆனால் புதிதாக முழைக்கும் ஒருசிலர் ஒரு இனத்தைசாடி துவசத்தை விதைப்பவர்கலாகவே இருக்கின்ரனர்

    ReplyDelete
  4. இவர் சொல்லுவதை பார்த்தால் சிங்களவர்களின் உணர்ச்சியை மறைமுகமாக தூண்டுவதாகவே தெரிகிறது. "இவர்களின் செயற்ப்பாடுகள் சிங்கத்தை போன்று உறுதி மிக்கதாக இருக்கவேண்டும் " என்ற வாசகத்தில் சிங்களவர்கள் கோழைகள் போல் அல்லாமல் தைரியமாக செயற்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.அத்துடன் இரவில் கோழைகள் போல் செயற்படாமல் பகலில் தைரியமாக செய்யட்பட சொல்கிறார்.இவ்வாறு இரவில் கோழைத்தனமாக செயற்படுவதால் தன இனத்துக்கே அவமானம் என்கிறார் இதனால் தெளிவாகத் தெரிகிறது இவர் மறைமுகமாக இனவாதிகளை மேலும் தூண்டுகிறார் என்று.

    ReplyDelete

Powered by Blogger.