Header Ads



"ஞானசாரர் கைது, முஸ்லிம்கள் எல்லை மீறலாகாது..."

-PM. JAWFER JP-

பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்று அல்லாஹ் நமக்கு கட்டளை இட்டுள்ளான் அதன் பிரகாரம் நாம் வாழ்கிறோமா என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.தொழுகையை கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடும் நம்மில் சிலர் பொறுமையை இழந்தும் விடுகின்றோம் தொழுகையை கொண்டோ பொறுமையை கொண்டோ உதவி தேடாதவர்களும் நம்மில் இருக்கிறோம் என்பதை யாராலும் மறுக்க  முடியாத உண்மையாகவும் உள்ளது. நாம் பொறுமையோடு இருக்கிறோமா என்பதற்கு நாம் எந்தத்தவறும் செய்யாமல் இருந்து பிறரால் தண்டிக்கப்பட்டால் அல்லது சோதிக்கப்பட்டால் பொறுமையோடு இருக்கும் பொறுமைக்கு அல்லாஹ்வின் உதவிவரும்.

 ஆனால் நாம் தவரை செய்து விட்டு அதற்காக சோதிக்கப்படும்போது அல்லது தண்டிக்கப்படும்போது பொறுமையாக இருப்பது உண்மையான பொறுமையாகுமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.ஏன் என்றால் உதாரணத்துக்கு ஒருவர் ஒரு களவை செய்து விட்டு பிடிபட்டு போலிஸ் அடிக்கும்போது பொறுத்துக்கொண்டு இருக்கிறேன் என்றால் அது போறுமையாகுமா அல்லது இந்த பொறுமைக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டுமா என்பதை நாமே முடிவடுக்க வேண்டும்.

 இப்போது விடயத்துக்கு வருகிறேன், கடந்தகாலங்களில் நமக்கு சொல்லாலும் செயலாலும் துன்புறுத்தி வந்த ஞான சார தேரோவின் கைதில் நமக்கு நிறைய பாடம் படிக்க வேண்டியுள்ளது பொருட்சேதம் உயிர்ச்சேதம் ஏற்ப்படுத்திய இவர் நமது எந்த பிரச்சினை சம்மந்தம் இல்லாத ஒரு விடயத்தில் மாட்டிக்கொண்டார்.இதுவும் நமக்கு கிடைத்தவொரு வெற்றி காரணம் நமது பிரச்சினையால் இவர் கைது செய்யப்பட்டிருந்தால் வெளியில் இருக்கக்கூடிய இவரின் சகாக்கள் நம்மீது பழி தீர்க்க வந்து விடுவார்கள்.அல்லாஹ் அவ்வாறானதொரு  விளைவில் இருந்து நம்மை பாதுகாத்தான் அல்ஹம்துலில்லாஹ்.

 இவர் கைதகியுள்ளது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த குற்றம் யார் செய்தாலும் சட்டம் தனது  கடமையை செய்யும் அது உதாரணத்துக்கு நம்முடைய உலமா சபை தலைவர் செய்தாலும் இதுதான் கெதி ஆனால் அவ்வாறு செய்யும் சமுக தலைவர்களை நம் சமுதாயம் ஈன்றடுக்காது மட்டுமல்ல அவ்வாறு செய்தால் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும்  என்று முஸ்லிம்கள் நீதிமன்ற அவமதிப்பில் இறங்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.   

அல்லாஹ்வின் எதிரி நபியின் எதிரி நபியின் எதிரி நம்முடைய எதிரி நாம் பொறுமை காத்தோம் சில விடயங்களை கண்டோம் அதற்காக அல்லாஹ்வை புகழ்வோம் நன்றி செலுத்துவோம்.அதை விடுத்து நாம் நமது திறமையால் இவரை பிடித்து ஜெயிலில் விட்டதுபோல் பெருமையடிக்க வேண்டிய அவசியம் இல்லை.முகநூல் பக்கங்களிலும் இன்னும் பல இணையதளங்களிலும் விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறான செயற்பாடுகளால் நம்முடைய பொறுமைக்கு பெறுமதியற்றாதாகவும் மேலும் உதவி கிடைக்கப்பெறாதவர்கலாகவும் ஆவதற்கான வழிகளை சந்திக்க வேண்டிஏற்படலாம்.

அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருந்தோம் அல்லாஹ்விடம் பொறுப்பு கொடுத்தோம். அவன் செய்ய வேண்டியதை செய்வான் அவனை புகழ்ந்தவர்களாக அவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக  பொறுமையோடு இருப்போம் பெருமயடிப்பவன் சிறுமைப்படுவான் இது இயற்கையின் நீதி. ஆகவே தயவு செய்து நம்முடைய முஸ்லிம்கள் இதை விமர்சிக்கவோ முகநூல்களில் அநாகரிகமாகவோ எழுதுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் இதன் நன்மை பற்றியோ தீமை பற்றியோ நாம் கண்டு கொள்ளாமல் இருப்போம். அல்லாஹ்வை புகழ்வோம். அவனுக்கு நன்றி செலுத்துவோம், பொறுமையைகொண்டும் தொழுகையை கொண்டும் அந்த அல்லாஹ்விடம் உதவியும் தேடுவோம். 

அல்ஹம்துலில்லாஹ். 

11 comments:

  1. அருமையான காலத்திற்கேற்ற பதிவு சகோதரரே வாழ்த்துக்கள்

    இவன் செய்த அட்டூளியங்கள் எல்லாம் நினைக்கும் போது 2 நாள் லீவு போட்டு கொண்டாட வேண்டும்.

    நாம் பொருமை காக்க கூடிய சிங்கங்களே.

    ReplyDelete
  2. Enter your comment...ya Allah... siraiyin ulle aayinum gnanarukku hidayathai koduppayaha.......

    ReplyDelete
  3. உண்மையான விடயம்

    ReplyDelete
  4. جزاكم الله خيرا

    ReplyDelete
  5. Well said Bro....patience...patience...patience...
    what more can we do in SL?..
    Some Tawheed bros...want to see justice....
    but what kind of justice we can get when justice was manipulated by politicians as in case previous regime...
    today the situation is different...let us all enjoy equal and just social conditions...rules of law should prevail...

    ReplyDelete
  6. சரியான சிந்தனையுள்ள எவருமே இதை சந்தோசமாக நினைக்கவும் கூடாது புகழ்பாடவும் கூடாது நாட்டின் சட்டதிட்டங்களுக்குகமைய தவறுசெய்பவர்களுக்கு இது சாதாரனமாகவே நடக்கும் விடயம் என்பதை புரிந்து கொண்டால் போதும்..

    ReplyDelete
  7. ஞானசாரர் நீதி மன்றில் தனது வழமை போல வரம்பு மீறி வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதால், சட்டம் தன்து கடமையைச் செயதுள்ளது

    இதே சட்டம் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட போது மௌனித்திருந்ததை முஸ்லிம்கள் நினைவிற் கொள்வது, இந்நாட்டில் முஸ்லிம்களின் நிலை எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை அளந்திட உதவும்

    ஆதலால் முஸ்லிம்கள் சந்தோஷப்படுவதற்கு எதுவும் இல்லை.

    பொறுமை, தொழுகை, நன்றி போன்றவற்றுக்கான விளக்கங்கள் குர்ஆனில் பதிவாகியே உள்ளன. அந்த அடிப்படையில் அது பற்றிய வசனங்களை அணுகும் போது சரியான விளக்கம் கிடைக்கலாம்.
    இன் ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  8. Aattaikkadiththu maattaikkadiththu kadasiyaaga Manizanikkadiththa kazaiyaaga irukkirazu. Nallaatchi , konjam
    konjamaaga shattaththai nilainaatta seyatpattu varugirathu enru
    therigirazu.

    ReplyDelete
  9. Law and order looks slowly returning to its real form.Long way
    to go but confidence building has started. Gnanasaara was not
    only a threat to the minorities but also to democracy and law
    and order. Law and order has punished him regardless of his
    status as a Buddhist Monk which he used to harass and humiliate
    many , especially Muslims and Christians. His behaviour went
    too far unquestioned and at the end he tried to play it at the
    wrong place and wrong time . Nobody should imagine he will come
    out and behave good after the experience . Muslims need to be
    extra cautious for some time until we see the clouds settle
    down with the Buddhist extremism . Buddhist extremism can
    surface anytime under any disguise . It has started and there
    are frustrated elements waiting for the right moment to act
    against us. Muslims also will have to make changes to deal with emerging situations successfully without adding more fuel to already worse situation . In that direction , this is a
    timely article.

    ReplyDelete
  10. இந்த விடயத்தில் மட்டுமல்ல, பொது ஊடகத்தில் எழுதும்போது எந்த விடயத்திலும் நம்மவர்கள் சிறிதளவேனும் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும்.

    நமது எதிரிகளைக் குறித்து எழுதும்போதும் கூட தயவு செய்து அவர்கள் புரியும் தவறுகளை விமர்சித்து எழுதுவதை விடுத்து அந்தரங்கங்களை கேவலமான சொற்றொடர்களால் தாக்கி எழுதுவதை கைவிட வேண்டும். அப்பொழுதுதான் நமது நியாயமான உணர்வை ஏனைய சமூகத்தினரும் புரிந்துகொள்வார்கள்.

    மாறாக வசைபாடினால், அது எழுதுபவரது துர்நாற்றம் வீசும் உள்ளத்தையே காண்பிக்கும்!

    ReplyDelete

Powered by Blogger.