சிங்கலே குறித்து, புதிய தகவல்கள் வெளியாகியது..!
சிங்கலே என்ற பெயரில் முன்னெடுத்துச் செல்லப்படும் பௌத்த இனவாத செயற்பாடுகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களினால் உருவாக்கப்பட்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் தகவல் வெளியிடுபவர்கள் தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளதாகவும், ஆண்கள், பெண்களின் மேலாடையில் சிங்கலே என அச்சிட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பலர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் ஊடகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வியாபாரத்திற்கு தலைமை தாங்குவது, மெடில்லே பக்னாலோக்க என்ற தேரராகும். அத்துடன் அவர் கடந்த காலங்களில் ராஜபக்ச ஆட்சியை பாதுகாப்பதற்காக கடுமையாக உழைத்த ஒருவராகும்.
சிங்கள ராவய என்ற பெயரில் இனவாத அமைப்பொன்றில் செயலாளராக செயற்பட்ட அவர், ராஜபக்ச ஆட்சியின் போது சட்டவிரோத மற்றும் முறையற்ற முறையில் செயற்பட்டமையினால் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராகும்.
இந்த சிங்கள ராவய அமைப்பு ஜாதிக ஹெல உருமயவுக்கு நெருங்கிய அமைப்பாகவே அப்போதைய காலப்பகுதியில் செயற்பட்டன.
சிங்கலே என்ற பெயருடைய ஸ்டிக்கர்களை தானுந்துகளில் ஒட்டுவதற்கு, இந்த சிங்கலே வியாபாரிகளினால் 2000 ரூபாய் அறவிடப்படுகின்றது. இதற்காக வலை தளம் ஒன்று தயாரிப்பட்டுள்ளது.
கோடி கணக்கிலான பணம் இந்த வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படுகினற நிலையில், இந்த பணம் கடந்த ராஜபக்ச ஆட்சியின் போது தவறான முறையில் பெற்று கொண்ட பணமாக இருக்கலாம் என இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கடந்த 28ஆம் திகதி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன,
சிங்கலே தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வியாபாரத்திற்கு பின்னணியில் ராஜபக்சர்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
கீழைத்தேய நாடுகளில் இனவாதம் நல்ல முதலீடும் என்பதும், வியாபார உத்திகளும் நன்றாகவே அறிந்தே வைத்திருக்குறார்; ஆசாமி.
ReplyDelete