Header Ads



அம்பாறையில் சுகாதார அமைச்சும், வெளிநாட்டு வைத்தியா்களும் நடாத்தும் இலவச வைத்தியமுகாம்

(அஷ்ரப் ஏ சமத்)

அம்பாறை மாவட்டத்தில் 25 - 28 ஆம் திகதி சுகாதார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம்.

சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம்
வேண்டுகோளுக்கினங்க " ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள் " நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன்  " மாபெரும் இலவச மருத்துவ முகாம்" எதிர்வரும் 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.

இதன் அடிப்படையில்
* ஜனவரி 25ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) நிந்தவூர் மதீனா
பாடசாலையிலும்,
* ஜனவரி 26ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) அட்டளைச்சேனை அரபா
வித்தியாலயத்திலும் ,
* ஜனவரி 27ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) சம்மாந்துறை
அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் ,
* ஜனவரி 28ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) மகாஓய சனசமுக
மண்டபத்திலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அட்டளைச்சேனையில் நடைபெறும் மருத்துவ முகாமுக்கு மாகான சுகாதார
அமைச்சர் நசீர் அவர்களது அதிகாரிகளும் கொள்ள உள்ளனா்.

சகல வைத்திய சேவைகளையும் கொண்ட மருத்துவ முகாமிற்கு வெளி நாட்டிலிருந்து ஜரோப்பிய கனடா  ஆகிய நாடுகளில்  இருந்தும்  வைத்திய குழுவினர்கள் வருகை தரவுள்ளதுடன் இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர்களும் இவ்வைத்திய முகாம்களில் கலந்துகொள்ளவுள்ளனர் அத்துடன் மூக்கு கண்னாடி பரிசோதனை இரத்த அழுத்தம், உடம்பில் உள்ள சர்க்கரை வியாதி,  என பல்வேறு பரிசோதனை இலவச வைத்திய பரிசோதனைகள்  நடைபெறும் இதில் அந்தந்த பிரதேச நோயாளிகள் மேற்படி முகாம்களுக்கு  கலந்து முழு பயன்களையும் பெற்று சுக பாக்கியத்துடன் வாழும் மாறு பிரதி சுகாதார அமைச்சா் பைசால் ஹாசீம் வேண்டியுள்ளாா்.

2 comments:

  1. The minister is the worker. He ever implements community related programs

    ReplyDelete
  2. well..must needed job for our poor ill peoples
    Thank you , go ahead

    ReplyDelete

Powered by Blogger.