Header Ads



தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குருவின் மகன், பரீட்சையில் மகத்தான சாதனை


-Nazeer Ahamed-

 பாராளுமன்றத்தை தாக்கினார் என்று முந்தய அரசால் குற்றம் சாட்டப்பட்டு 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால் தூக்கிலிடப்பட்டது ஞாபகம் இருக்கலாம். பெரும்பான்மை கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்கிலிடப்பட்டார். அதோடு பல உண்மைகளும் புதைக்கப்பட்டது.

இவரது குடும்பம் காஷ்மீரில் அவந்திபுரா கிராமத்தில் வாழ்ந்து வருகிறது. அப்ஸல் குருவின் மகன் கலிப் குரு இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் நேற்று வெளியாயின. அந்த தேர்வுகளில் கலிப் குரு 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதல் தரத்தில் தேர்வாகியுள்ளார். 500 க்கு 474 மார்க்குகள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

'சிறையில் என் தந்தையை நான் பார்க்கச் செல்லும் போதெல்லாம் 'நீ படித்து டாக்டராக வர வேண்டும்' என்பார். அவரது ஆசையை நிறைவேற்றுவேன்' என்கிறார் பத்திரிக்கையாளர்களிடம்.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
11-01-2016

கலிப் குரு!

உன் தந்தை பாராளுமன்றத்தை உண்மையிலேயே தாக்கியிருந்தால் அதற்கான தண்டனை சரியே.

ஆனால் உனது தந்தை வஞ்சகமாக இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் சொர்க்கத்தில் மகிழ்ச்சியோடு இருப்பார். உனது தந்தை மருத்துவராக விருப்பப்பட்டார். அது நிறைவேறவில்லை. நன்றாக படித்து அவரது ஆசையை நீ நிறைவேற்று. உனது தாய் நாடான இந்தியாவுக்கு சேவை செய்து உன் தந்தையின் ஆசையை நிறைவேற்று.

என்னவோ தெரியவில்லை... இந்த பதிவை மொழி மாற்றம் செய்து எழுதிக் கொண்டிருக்கும் போதே என்னையறியாமல் எனது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

இந்த சிறுவனின் வாழ்வை இறைவா சீராக்குவாயாக! கணவனை இழந்து தவிக்கும் அந்த தாய்க்கு இவன் மூலம் மகிழ்ச்சியை தந்தருள்வாயாக!


2 comments:

  1. Congratulation Bro.Kalib Guru. Study with confident.Go ahead. ALLAH will help you.

    ReplyDelete
  2. Kalib guru go ahead allah will help u my dear. I will meet u before i die.

    ReplyDelete

Powered by Blogger.