Header Ads



"மாட்டு இறைச்சியும், நாய் இறைச்சியும்"


-Mohamed Rajhi-

இலங்கையில் மாடு பற்றியும் மாட்டு இறைச்சி பற்றியும் இளைப்பின்றி பேசும் கூட்டம் , உண்ண வழியில்லாமல் நாய்களையும் பூனைகளையும் புற்களையும் பூண்டுகளையும் உண்ணும் சிரியா மக்களை மறந்து விடுகிறார்கள்.

உம்மாவின் பெருந்தன்மையை நினைக்க பூரிக்கிறது உள்ளம் .எத்தனை பேரின் து ஆக்களில் சிரிய மக்கள் கேட்கப்படுகிறார்கள் ...?

சுயநலத்தின் உச்ச கட்டம்.!!

லெபனானில் யுத்தம் வெடித்தபோது நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று ஈராக் மக்கள் எண்ணினார்கள் . ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது பக்கத்து வீட்டு பிரச்சினை தானே என்று இருந்தது சிரியாவின் மக்களுக்கு .. சிரியாவில் பிரச்சினை வெடித்த போது நமது நாடு பாதுகப்புத்தானே என்று எண்ணினார்கள் சவூதி ,ஜோர்தான் , துருக்கி ,லெபனான் மக்கள் . இப்போது அவர்களின் கதவும் தட்டப்படுகிறது .

நிம்மதி இல்லாமால் தவிக்கிறார்கள் ..

பர்மாவில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பௌத்தர்களை அப்சட் பண்ணும் என்று ஆர்ப்பாட்டம் செய்யாமல் வாய் முடி இருந்தோம் இலங்கை முஸ்லீம்களான நாம் ....

நம்மக்குள் ஓடும் இரத்தத்தில் இருக்கும் வெறியெல்லாம் இயக்க மோதலும் ,விவாத மேடைகளும், பிராந்திய அரசியலும் , பிரதேச வாதங்களும், மாட்டு இறைச்சி கொண்ட சஹன் சாப்பாடுகளும் மட்டும்தாம் .

உம்மா என்பது உடல் போன்றது ஒரு பகுதியில் காயம் ஏற்படும் போது ஏனைய பகுதி அதை உணர வேண்டும் என்ற நபிகள் நாயகம் ( ஸல் ) கூறிய ஹதீஸ் நினைவுக்கு வருகிறது .. காயம் உடலின் ஒரு பகுதியில் ஏற்பட்டால் மறு பகுதி உணர மறுக்கும் நிலையில் இருக்கிறோம் நாம் . அதனால் தொற்று நோய் போல பிரச்சினைகள் நம்மை தொற்றிக்கொண்டே இருக்கின்றன ..

No comments

Powered by Blogger.