நவமணி மீதான தாக்குதல் - அரச உயர்வட்டாரத்திற்கு கொண்டு செல்லபட்டது
நவமணி பத்திரிகை அலுவலகம் மீது விஷமிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து, அரசாங்கத்தின் உயர்வட்டாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் நவமணி பத்திரிகை அலுவலகம் மீது, விஷமிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது யார் மேற்கொண்டது என்பது தெரியாது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் விடயம் கொண்டு செல்லபட்டுள்ளது. முஸ்லிம் பிரமுகர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தியுள்ளனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுதொடர்பில் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடினர் எனவும் என்.எம். அமீன் மேலும் தெரிவித்தார்.
Post a Comment