"இஸ்லாம் என்றால் என்ன" என்று ஆய்வுசெய்ய தொடங்கியபின், ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்..!
அமெரிக்காவில் 70 லட்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக அதிபர் ஒபாமா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பியூ என்ற ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில்,
அமெரிக்காவில் இஸ்லாத்தை ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்கும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் தற்போது 27 லட்ச இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பியூ ஆய்வு மையும் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் 3186 பள்ளிவாசல்கள் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகே இஸ்லாத்தை பற்றிய தாக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்பட்டு இஸ்லாம் என்றால் என்ன ? என்று ஆய்வு செய்ய தொடங்கிய பிறகே அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் 1,200 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. இதை ஆண்டுக்கு கணக்கிட்டு பார்த்தால் 120 பள்ளிவாசல்கள் வீதம் கட்டப்பட்டுள்ளது. வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் திகழ்கிறது.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...
They plot... But Allah plot batter than them.
ReplyDeleteAlhamthu lillah
ReplyDelete