Header Ads



நிந்தவூரில் நகர அபிவிருத்தி, சம்பந்தமான ஒன்றுகூடல்

-மு.இ.உமர் அலி- 

நிந்தவூரிற்கான  நகர திட்டமிடலுக்கான  செயலமர்வு இன்று  புதன்கிழமை (2016 JAN 13) பிற்பகல் பிரதேச சபையில் நடைபெற்றது.

கிழக்குமாகாணத்திற்கான நகர திட்டமிடல் பணிப்பாளர் ராஜநாயகம்,அம்பாறை மாவட்டத்திற்கான  நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உதவிப்பணிப்பாளர் J சோமசிறி,நிந்தவூர் பிரதேச செயலாளர்,பிரதேச சபயின் செயலாளர் NWC இன் உட்கட்டமைப்பு துறையின் தலைவர் பிரதி நில அளவை நாயகம் முஹமட்   ரபீக், NWC இன் தலைவர் யாகூப் ஹசன் உட்பட  நகர திட்டமிடல் அதிகார சபையின் பல உத்தியோகத்தர்கள், பிரதேச  திணைக்கள தலைவர்கள் உட்பட பலர்   கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன. எதிர்வரும் அமர்வுகளில் பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும்  பல்வேறு  நிறுவனங்களும் நபர்களும்  உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.