Header Ads



மாடறுப்பு தடையை, இஸ்லாத்தின் பார்வையில் எவ்வாறு நோக்கலாம்..?

-M.M.M.Arshad-
 
மாடுகளை உணவுக்காக பயன்படுத்துவது என்ற ஒரு விடயத்தின் பின்னால் எத்தனையோ நன்மைகள் இருக்கிறது . உதாரணமாக மனதர்களின் ஒரு உணவுத்தேவை நிறைவேறுகின்றது , முக்கியமாக சூழல் சமநிலை பேணப்படுகிறது . மாடுகளை அறுக்காமல் விடும்போது அதன் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சூழல் சமநிலை மிகவும் பாதிக்கப்படும். இதனால்  மக்களும் அரசும் பாதிக்கபடுவது உறுதி என்ற உண்மை தெரிந்தும் அரசு இம்முடிவை எடுக்க முனைந்திருப்பது அதிகமானவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சர்வதேசத்தை அவதானிக்கும்போதும் உலக நாடுகளில் முஸ்லிம்களின் சில விடயங்களுக்கு தடையுத்தரவு பிறபிக்கபட்டுக்கொண்டிருகிறது. 

எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இது உலக முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்கும் காலமாக இருக்கிறது. இந்த கண்ணோட்டத்தில்தான் இதை அணுகவேண்டியிருக்கிறது. இவ்வாறான தடைகளின் போது முஸ்லிம்கள் தங்கள் உணர்சிகளை அடக்கி சுழலை கருத்தில்கொண்டு நிதானமாக, கலந்துரையாடலின்  மூலமும் சில விட்டுகொடுப்புக்களின் மூலமும்  இவற்றை அணுகவேண்டும் .

அந்நியவர்களுடன் முஸ்லிம்கள் எப்போதும் நீதியை நிலைநாட்ட பேச்சுகளையும் அவை முடியாத போது இயலுமானவரை சில விட்டுகொடுப்புகளையும் செய்து பொறுமை காக்கவேண்டும். பொறுமையாளர்களுக்கே இறுதி வெற்றி என்பது நமக்கு நமது மார்க்கம் காட்டித்தந்த வழி . சமூக வலைதளங்களில் இதற்கு காரணமான  அரசுகளை குறிப்பிட்ட தீவிரவாத இயக்கங்களை திட்டி தீர்க்கும் நடவடிக்கைகளில் இருந்து முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் . முஸ்லிம்  அரசியல்வாதிகள் , உலமாக்கள் , சமூக புத்திஜீவிகள் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு தங்கள் தரப்பு நியாயங்களையும் அரசுடன் முடியுமானவரை பேசவேண்டும் . அரசும் சில நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கலாம் . 

அவர்கள் தரப்பு நியாயத்தையும் கேட்கவேண்டும் . ஏனெனில் அந்நியர்களுடனான உரையாடலில் நீதியின் ஊடாகவே நமது அணுகுமுறை இருக்கவேண்டும் . இஸ்லாத்தில் முஸ்லிம்களுக்கு அனுமதிக்கபட்டிருந்தாலும் அந்நிய நாடுகளில் வாழும்போது சில ஒழுங்குகள் நமக்கு இருகின்றன. அதன் ஊடாகவே நாம் சில விட்டுகொடுப்புகள் செய்யவேண்டிவரலாம் . எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும் .  

ஒவ்வொரு தடைகளின் பின்னாலும் இஸ்லாம் விளம்பரபடுத்தபடுகிறது என்ற உண்மையை நாம் அறிந்தால் பொறுமையாக இருக்கமுடியும் . இதன்போது முஸ்லிம்களும் சில தியாகங்களை செய்யவேண்டியிருக்கும் . கடந்த அரசில் இவ்வாறான பிரச்சனைகளின் போது நாம் சில விடயங்களை விட்டுகொடுத்தோம் .  பிறகு இஸ்லாத்தின் எதிரிகளின் அதிகாரங்களை அல்லாஹ் எவ்வாறு  இல்லாமல் செய்தான் அவர்களை எவ்வாறெல்லாம் கேவலப்படுதினான் என்று நாம் கண்முன்னே அதிசயத்தை கண்டோம். 

உண்மையில் சொல்லபோனால் இஸ்லாத்தின் எதிரிகளின் தாக்குதல், எதிர்ப்பு அதிகரிப்பது எங்கே தாங்கள் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தின் வெளிபாடே எனவே இஸ்லாத்தின் வெற்றி நெருங்கி கொண்டிருகிறது . 

இப்போதுதான் முஸ்லிம்களை பற்றி எதிரிகளின் உள்ளங்களில் அச்சம் ஏற்பட்டிருகின்றது. பொறுமையாளர்களுக்கு  குறிப்பிட்ட ஒரு சம்பவம் நேரடியாக பார்க்கும்போது கவலையாக தெரிந்தாலும்  இறுதியில் அது வெற்றியாகவே அமையும். வரலாறுகள் இதற்கு சாட்சி . இவ்விடயங்களின் போது முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதிகளையே சமூக வலைதளங்களில் குறைசொல்லும் விடயங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளவேண்டும் . 

எதிர்வரும்காலங்களில் முஸ்லிம்கள் மன ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தங்களை தயார்படுத்தவேண்டும் . எதிரிகள் ஊடாகவும் இஸ்லாத்தை வளர்க்க அல்லாஹ் போதுமானவன் .
 

4 comments:

  1. i just ask you to give 1 strong reason.. why they do not allowed this.....because they do not want to save the cows.. they just want to insult our rights. we have to open the eyes before its get worst.

    ReplyDelete
  2. you just post only your favorable comments.. its ok keep it up

    ReplyDelete
  3. Yes Saha, JM also doing politics. This not good for our society. We spent our time for writing comments but JM not posting.

    ReplyDelete

Powered by Blogger.