Header Ads



"நான் முஸ்லிம் என்று சொல்பவர்கள், சிந்திக்க தவறுகிற முக்கிய விடயம்"

-M. JAWFER.JP-

கடந்த சில தினங்களாக முகநூல் பக்கங்களில் முஸ்லிம் என்றொருவர் இலங்கையில் உள்ள புத்த தேரரான ஞானசார என்னும் இனவாதிக்கு எதிராக பாவிக்க முடியாத வார்த்தைகள் மூலம் பேசி இணைய தளங்களில் உலாவவிட்டதன் விளைவாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  இருக்கக்கூடிய பெரும்பான்மை இன மக்களின் வெறுப்பான பேச்சுக்களை அதிரடியாக பாவிக்கும் விதங்களை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த நம்மினத்தை சேர்ந்தவர் செய்தது செரியா பிழையா என்று நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டியுள்ளது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் நாசுவன் என்ற கதையாக இந்த பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. சிறுபான்மையான நாம் சிறியதாக பாவிக்கும் கெட்ட வார்த்தைகளால் பெரும்பான்மையினர் அதைவிடவும் கடுமையான சொற்பிரயோகங்க்களை பயன்படுத்தி சாதாரணமாக நம்மோடு இரண்டரக்கலந்திருக்கும் நல்ல பண்புள்ள பெரும்பான்மை இனத்தவர்களையும் நம்முடைய எதிரியாக மாற்றுவதற்கு வாய்ப்பை நாமே ஏற்ப்படுத்திக்கொடுக்கும் ஒரு துரதிஷ்டமான வேலையை ஆரம்பித்து வைப்பதாகவே இச்செயல் அமைகிறது. 

 நம்மவர்கள் முதலில் சிந்திக்க வேண்டும் நாம் முஸ்லிம்கள் நமக்கன்று ஒரு மார்க்கம் வழிகாட்டல் இப்படித்த்தான் வாழவேண்டும் என்ற கோட்பாடு உண்டு அதன் அடிப்படையில் தான் நாம் அல்குரானையும், அல்ஹதீசையும் பின்பற்றுகிறோம்.அதன் மூலம் நமக்கு காட்டப்பட்டுள்ள வழி என்ன என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் அடுத்தவர்களின் மதத்தையோ அடுத்தவர்கள் இறைவன் என்று சொல்லி வணங்கக்கூடியவற்றை நாம் குறை கூறும் போது ஏசும்போது அவர்கள் நாம் வணங்கும் அல்லாஹ்வை அறியாமல் ஏசுவார்கள் என்ற விடயத்தை இற்றைக்கு ஆயிரத்து நானுற்றி முப்பத்தி எழு வருடங்களுக்கு முன் நமக்கு அல்லாஹ் சொல்லித்தந்துள்ளான்.அதை காலத்துக்கு காலம் வாரத்துக்கு வாரம் பள்ளிகளில் மிம்பர்களின் ஊடாக கேட்டு வருகிறோம்.இவ்வாறு நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கும் இந்த விடயங்களால் நாம் இன்னும் திருந்தவில்லை என்பதுதான் உண்மை.

நான் முஸ்லிம் என்று வாதாடக்கூடிய இவர்கள் ஒன்றை சிந்Tதிக்க தவறவிடுகிறார்கள் உண்மையில் நான் முஸ்லிமாக வாழ்கின்றேனா? இறைவனின் கடமைகை செய்கின்றேனா? நபியவர்களின் போதனைகளை பின்பற்றுகின்றேனா? இவ்வாறானவர்கள் ஒரு ஹதிஸை பார்க்க வேண்டும் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு  சகோதர முஸ்லிமுக்கு தன் நாவலோ தன் கையாலோ தீங்கு செய்ய மாட்டான் என்டாரர்கள்.இதிலிருந்து இவ்வாறு பேசும் சகோதரர்களால் பேசப்படும் பேச்சுக்களால் பாதிப்பு ஏற்ப்படும் போது நம் சகோதர மஸ்லிம்கள் பாதிக்க படுவார்கள் அப்போது இந்த நபர் முஸ்லிம் சகோதரர்களுக்கு தன் வாயால் தீங்கு இளைத்து விட்டார் என்பது உறுதியாகிவிடுகிறது.கொலை செய்வதை விட குழப்பம் உண்டு பண்ணுவது அதைவிட பெரும் பாவம் என்று அல்லாஹ் சொல்லும் குரான் வசனத்தை இச்சகோதரர்கள் எவ்வாறு எடுத்துக்கொண்டார்கள்.

 ஒரு தாக்கத்துக்கு எதிர் தாக்கம் சமன் என்று சேர் ஐசாக் நியுட்டனின் கருத்தை வரவேற்று இவ்வாறு கருத்து  வெளியிடும் சகோதரர்கள் இந்த அறிவாளிகளை எல்லாம் படைத்து அறிவை கொடுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அறிவுறுத்தியுள்ள வசனங்கள் நபியவர்களின் முன்மாதிரிகளை பின்பற்ற தவறும் காரணம்தான் என்ன?நாம் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முழுமையாக பின்பற்றி இருந்தால் இவ்வாறான சோதனைகள் வர வழி இல்லை என்பதை உணர்வோம்.   

5 comments:

  1. Enter your comment... Panpadatha vimarsaharhalthan inayaththil athiham irukkirarhal.

    ReplyDelete
  2. அங்கள் சமூகத்தில் இவ்வாரான முஸ்லிம் முட்டாள்கள் நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் அரை குறை முஸ்லிம்கள். இவர்களின் ஆவேசம் எல்லாம் Facebook இல் தான்.

    ReplyDelete
  3. இனப் பிரச்சினையை உருவாக்க
    முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்
    பெயரில் சமுக வலைத்தளங்களை உருவாக்கி இவ்வாறான விசம கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்
    கவனமாக இருக்கவும்

    ReplyDelete
  4. இனப் பிரச்சினையை உருவாக்க
    முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்
    பெயரில் சமுக வலைத்தளங்களை உருவாக்கி இவ்வாறான விசம கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்
    கவனமாக இருக்கவும்

    ReplyDelete
  5. Of course we are Muslims but we all no matter what cast religion race etc belongs to human race we Muslims should know how to set an example this is what Islam teach

    ReplyDelete

Powered by Blogger.