மகன் சிறைச்சாலைக்கு செல்லும்போது, கண் கலங்கினார் மகிந்த (படங்கள்)
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று 30-01-2016 முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
கடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச, கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை முன்னாள் மகிந்த ராஜபக்ச, கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
What about the years of several hundreds of parents who lost their children, children who lost their siblings by the crimes of MR and his goons.
ReplyDeleteபொன்சேகாவின் மனைவி பிள்ளை குட்டிகளெல்லாம் எத்தனை நாட்களாக கண்ணீர் சிந்தியிருப்பர்கள். யுத்தத்தின் தளபதியை சிறையில் வாட்டியவனின் கதையும் அப்படியே ஆகட்டும்.
ReplyDeleteதிரு. ராஜபக்ச,
ReplyDeleteஒரு தந்தையாக உங்களது பாச உணர்வை மறுக்கவில்லையாயினும் ஊடகங்களின் முன்பு இவ்வாறு நிற்பது படிப்பறிவில்லாத சாதாரண பாமர மக்களின் அனுதாபத்தை திரட்டுவதற்கான உமது தேர்ந்த நடிப்பு!
கைவிலங்கிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றதற்கே கண்கலங்கும் முதியவரே, உங்கள் ஆட்சியில் இதுபோல மட்டுமல்ல இதைவிட மோசமாக எத்தனை முதிய தாய்கள் தந்தைகளை கலங்கடித்திருப்பீர்.. (உ-ம்: வசீம் தாஜுதீனின் தந்தை, தாய்) நினைத்துப் பாருங்கள்.. காலம் வலியது!
இவர் இதற்கே இப்படி கண்ங்குகிறார். அப்பொழுது தன் மகனை பறிகொடுத்த வசீம் தாஜுதீனின் பெற்றோர் , உறவினர்கள் எப்படி கண்கலங்கி இருப்பார்கள், இன்னும் கண்கலங்கிக் கொண்டிருப்பார்கள்?
ReplyDeleteகாணாமல் ஆக்கப்பட்டோரின் தாய், மனைவி களின் வலியின் ஒரு சிறு பகுதியாயினும் உணரப்பட்டிருக்கும.
ReplyDeleteStill How many fathers and mothers are crying for lost their children under the mahinda regime.
ReplyDeleteபல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் வடிக்க காரணமான நீ இப்போது கண்ணீர் வடிக்கிறது ஒன்றும் தவறு இல்லை
ReplyDeleteபட்டால்தான் தெரியுமென்பார்....பட்டதுவே போதுமென்பார்..நிலை உயரும்போது பணிவு இருந்திருந்தால் உயிர்கள் கூட இப்போ வணங்கியிருக்கும் இப்போ அழுது என்னபயன்..
ReplyDelete