Header Ads



"மூடியற்ற நிலையில் நிந்தவூர்"


-மு.இ.உமர் அலி.-

நிந்தவூரின் பிரதானவீதியில் உள்ள  அநேகமான வடிகான்கள் மூடியற்ற நிலையில்  காணப்படுகின்றன.இவ்வாறு மூடியற்ற  நிலையில் காணப்படுகின்ற  வடிகான்களில் மக்கள்  கழிவுகளை கொட்டுகின்றார்கள்,பாதசாரிகளும் ஏனையவர்களும்  தடுக்கி விழுந்து  பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.

வீதி ஓரத்தினால் நடந்து செல்லும் பாடசாலை  மாணவர்கள் தவறி விழுந்த சந்தர்ப்பங்களும்  உண்டு,

அல் அஸ்ரக் தேசிய பாடசாலையின் தென்புறமாக  உள்ள கொங்கிரீட் வீதியினது  வடிகானும் திறந்த நிலையில் உள்ளது இப்பாடசாலைக்கு சென்று வரும் மாணவர்கள் இந்த ஆழமான  வடிகானினுள்  விழுந்து விபத்துக்குள்ளாகுவதற்கு  வாய்ப்புமுண்டு.

 பல ஆண்டுகளாக பராமுகமாக இருக்கும் இந்த வீதியோர  வடிகான்களிற்கு  மூடிகள்  இடப்பட வேண்டும் என பல முறை வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும் இதுவரை எதுவித   ஆக்கபூர்வமான  நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே   குறித்த திணைக்களத்தின்  இவ்வருடத்திற்கான ஒதுக்கீட்டில்  இருந்து  மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்பட வேண்டும் என  பொதுமக்கள்  வேண்டுகோள் விடுக்கின்றனர்.  நிறைவேறுமா மக்களின் அவா..?


1 comment:

  1. Pls give the priority to develop the very important road in Ninthavur which is from main road to hospital.Now Hon. Minister Faizal can do this matter.

    ReplyDelete

Powered by Blogger.