Header Ads



மஹிந்தவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் பற்றி, பாராளுமன்றில் அறிவிக்கப்படும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களது வெளிநாட்டு வங்கி கணக்கு குறித்து பாராளுமன்றில் அறிவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை திரட்டுவதற்கு சில காலம் அவசியமாகும் அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பணம் இருப்பதாக அண்மையில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தமை குறித்து அனுரகுமார கேள்வி எழுப்பியிருந்தார்.

மஹிந்தவின் வெளிநாட்டு கணக்கு வைப்புக்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவான விபரங்களை வெளியிட வேண்டுமென அவர் கோரியிருந்தார். இந்த விடயங்கள் குறித்து பாராளமன்றில் தகவல்கள் வெளியிடப்படும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.