தொலைபேசி கட்டணங்களில், பெப்ரவரியிலிருந்து மாற்றம் (முழு விபரம் இணைப்பு)
இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவைக் கட்டணங்களிலும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவை வழங்குனர்களின் கோரிக்கைகமையவே மேற்படி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், 1991ஆம், 25ஆம் இலக்கத்திற்கமைய இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 5 (கே) திருத்தத்துடன் நிமிடத்திற்கு அறவிடும் பணம் தொடர்பாக பொது கட்டணம் முறை ஒன்று எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரே வலையமைப்பிலிருந்து அதே வலையமைப்பிற்கும், ஏனைய வலையமைப்பிற்கும் மேற்கொள்ளும் அழைப்பிற்கு நிமிடத்திற்கு 1 ரூபாய் 50 சதமும் விநாடிக்கான கட்டணம் 1 ரூபாய் 80 சதம் அறவிடப்படும்.
அதேவேளை, குறும்படத்தகவல் (mms) மற்றும் குறுஞ்செய்திக்கான கட்டணம் 20 சதம் அறவிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கட்டணம் மாற்றம் தொடர்பில் மேலதிக பரிசீலணைகள் செய்வதற்காக குழு ஒன்றை நியமிப்பதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment