Header Ads



"ஒரு விஞ்ஞான மாணவனின் அவலம்"

 -S.M.Akram-

O/L முடித்து நல்ல ரிசல்டும் எடுத்து A/L விஞ்சானம் படிப்போம்னு முடிவெடுத்தாலே நம்ம  வாழ்க்கை காணாத பல சிக்கல்களை காணத்துவங்கும்.

அனுராதபுர மாவட்டத்தில் தமிழ் மொழி விஞ்சான வகுப்புக்கள் இல்லாமல் வேறு எங்காவதுதான் படிக்கவேண்டும். அப்படியே வெளி மாவட்ட பாடசாலைகளிற்கு போனால் அங்கு வேற மாவட்டத்திலிருந்து வந்து இங்கு படிக்க வேண்டாம்னு ஆயிரம் பேர் கங்கணம் கட்டிட்டு இருப்பார்கள்.

சரி நம் மாவட்டத்தில் இருந்தே படிபக்கலாம் என்று முடிவெடுத்தா கட்டாயம் வெளி வகுப்பு தேவை.அதற்கு  கண்டியிலோ கொழும்பிலோ நடக்குற 3 நாள் வகுப்புக்கு பயணம் செய்யவே மேலதிகமா இரண்டுநாள் தேவை.அதெல்லாம் தாண்டி அதிகாலையில் எழும்பி பஸ் எடுத்து வகுப்பிற்கு  போனால் பயணக் களைப்பில் பாதிப்பேர் தூங்கிட்டு இருப்பர்.

அதிலும்  நம் ஊர்ல 30 பேர் வகுப்பில் படித்துவிட்டு ட்டு அங்கே 300 பேர் படிக்கும் வகுப்பிற்கு  போனதும் சிலருக்கு சும்மாவே தூக்கம் வந்துவிடும் .மாதம் 8000 பஸ் செலவு சாப்பாட்டு செலவு 10000 என்று நம் வீட்டு  மொத்த வருமானமும் நமக்கே செலவாகிவிடும்.

சரி கண்டியிலோ கொழும்பிலோ தங்க இடம் பார்க்கலாம் என்று  இடம் தேடச்சென்றால் மூணு நாள் தங்கவே 3000 சான்றிதழ்தேவை அதெல்லாம் கொடுத்து வீடு பார்த்து தங்கலாம்னு  போனால் அங்க இருப்பதைவிட ரோட்ல இருக்கலாம்னு தோன்றும்.

இதெல்லாம் தாங்கி படிக்குரோம்னு சொல்லி படும் பாடு AL விஞ்சானம் படித்தவனுக்கு மட்டும்தான் தெரியும்.இதுக்கெல்லாம் முடிவு கட்டி ஊரில் வந்து விஞ்சானம் படிப்பிக்கின்றோம் என்று நாலு பேர் வந்தால்அது தாங்காமல் கொஞ்சப்பேர் அதையும் கெடுக்கிறார்கள்.ஏன் இப்படி? எல்லோரும்  விஞ்சானம் படித்து பாத்தாத்தான் அந்த கஷ்டம் தெரியும்.

ஏதோ புத்தகத்தில் உள்ளதை பாடம் ஆக்கி விட்டு எப்பவோ அழிந்து போனதையும்  முடிந்து போனதையும் பக்கம் பக்கமா எழுதிவிட்டு  அதை பெருமையா நினைத்துக்கொண்டு வாழும் மனித ஜென்மங்களேஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள் ஒரு சமுகம் விஞ்சானம் படிக்க அதிகமா ஆசை படுகின்றது என்றால் அது தனது வாழ்க்கையில் முன்னோக்கி செல்கிறது என்றேஅர்த்தம்.

3 பாடங்களிலும் நல்ல சித்தி  அடைந்தும் வீட்டில் சும்மா இருக்க வைக்கும் கல்வியை விட ஒரு பாடம் மட்டும் சித்தியடைந்தாலும் நல்ல எதிரகாலம் கொடுக்கும் கல்வியே சிறந்த கல்வி.அரசியலும்,வரலாறும்,தமிழும் எந்த மூளைக்கு  இன்று.கணணி உலகில் தேவயானது உடனே அறிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.

புத்தகங்களே PDF ஆக மாறிவிட்ட காலம் இது அதன் இடையில் இறந்தவர்களை பற்றி எதுக்கு கல்வி.நம் ஊரில் நல்லது நடந்தால் நமக்கும் நம் பரம்பரைக்கும்தான்.அதை கெடுத்தாலும் அப்படியே.உலகம் தெரியாதவர்களாய் நாம் இருக்கும் வரை நம்மை எமற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.துஷ்டர்களின் பலமான ஆயுதம் நம் மடைமைத்தனமும் அறியாமையுமே..

எதிர் கால மாணவர்களிற்காக சொந்த ஊரில் வகுப்பு நடத்த வேண்டி நிற்கும் 
முன்னாள் உயிரியல் விஞ்சான மாணவன்.

1 comment:

  1. Kattayam ivarku palliyala support kudakkanum. Kalvi apiviruthi enkirathu seyalilum thevai. Yarda padikkiram enkiratha vida nama nama padikkanum athan mukkiyam. Ivar uruwana poddi aakkal uruwawanga athaaleyee tharam koodum. So do first step...

    ReplyDelete

Powered by Blogger.