Header Ads



மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈரானியர்கள்

ஈரான் மீதான பொருளாதார தடையை உலக நாடுகள் நீக்கியுள்ள நிலையில், மக்களும், அரசியல்வாதிகள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

அணு ஆயுதம் தயாரிக்கவே ஈரான் அணுசக்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தன.

இதனை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி போன்ற ஆறு நாடுகள் பொருளாதார தடை விதித்தன.

இதனையடுத்து கடந்தாண்டு அவுஸ்திரேலியாவின் வியன்னாவில், தடை விதித்த நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஜூலை மாதம் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில் உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள பொறுப்புகளை ஈரான் சரியாக நிறைவேற்றியதால், கடந்த 16ம் திகதி அதன்மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் நீக்கியுள்ளன, ஐரோப்பிய ஒன்றி யமும் தடைகளை விலக்கிக் கொண்டது.

இந்த தடை நீங்கியதால் மக்களும், அரசியல்வாதிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதற்கிடையே இந்த தடை காரணமாக உடனடி அற்புதங்கள் நிகழும் என எதிர்பார்க்கவேண்டாம் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அணுசக்தி உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீபை மக்கள் பிரதிநிதிகள் பாராட்டினர்.

1 comment:

  1. correct the mistake : not Australia, Vienna
    " Austria,Vienna" is correct

    ReplyDelete

Powered by Blogger.