Header Ads



அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ள, உலகில் மிகப் பெரிய கப்பல்


வாகனங்களை ஏற்றிச் செல்லும் உலகில் மிகப் பெரிய கப்பல் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஹைபரிசன் ஹைவே என்ற கப்பல் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் ஒரே தடையில் 7 ஆயிரத்து 700 வாகனங்களை ஏற்றிச் செல்ல முடியும்.

கப்பல் தயாரிக்கப்பட்டு மூன்று மாதங்களே கடந்துள்ள நிலையில், கப்பல் ஜப்பானில் இருந்து உலகின் பிரதான துறைமுகங்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளது. அந்த வழியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் வந்துள்ளது. கப்பலை வரவேற்றும் நிகழ்வொன்று கப்பலுக்குள் நடைபெற்றது.

இதில் கப்பலுக்குரிய கப்பல் நிறுவனம் மற்றும் துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இந்த மாதம் வாகனங்களை ஏற்றிய 15 கப்பல்கள் வரவிருப்பதாக துறைமுக அதிகார சபை கூறியுள்ளது.


No comments

Powered by Blogger.