சத்தியாக்கிரகத்தில் குதிக்கவிருந்த பிக்குகளுடன் ஜனாதிபதி தொலைபேசியில் பேச்சு, இன்று நேரடி பேச்சு
பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்ததேரை தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு ஜனாதிபதி தமக்கு அழைப்பு விடுத்தார் என நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அமைப்பின் உப தலைவர் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர், அமைப்பின் ஆலோசகர் பேராசிரியர் இந்துராம்பே தம்மரத்ன மற்றும் ஒமர்பே காசியப்ப உள்ளிட்ட சில பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை இன்று சந்திக்க உள்ளோம்.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாளை எமது அமைப்பினால் நடத்தப்படவுள்ள சத்தியாக்கிரக போராட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டறிந்து கொண்டார் என முரத்தட்டுவே ஆனந்த தேரர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஐக்கிய இலங்கையை இரண்டாக பிளவடையச் செய்யக் கூடாது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் பெவிதி ஹன்ட அமைப்பு நாளை புறக்கோட்டையில் சத்தியக்கிரக போராட்டமொன்றை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை முற்பகல் 10.30 அளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
ராஜபக்ச அன் கோ களின் ஒரு காய் நகர்த்தல் தான் இந்த பிக்குகளின் சத்தியாக்கிரகம்... இந்த காய் நகர்தலுக்கான பதில் காய் நகர்தல் தான் my3 யின் தொலைபேசி அழைப்பும் சந்திப்பும் ஆகும். பொறுத்திருந்து பார்போம்.......!!!!
ReplyDelete