கொழும்பு வைத்தியசாலைகளில், சிறுநீரக கடத்தல்..?
இலங்கையின் சில வைத்தியசாலைகளில் சிறுநீரக கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மூன்று வைத்தியசாலைகளில் சட்டவிரோத சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெலுங்கான மாவட்டத்தில் இந்த சீறுநீரக உறுப்பு மாற்று சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 வயதான ஹோட்டல் முகாமைத்துவ மாணவர் ஒருவர் முதலில் தனது சொந்த சிறுநீரகத்தை 500,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த மாணவர் பல்வேறு நபர்களை சிறுநீரக சட்டவிரோத உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பயன்படுத்திக்கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சமூக வலையமைப்பினைப் பயன்படுத்தி குறித்த நபர் பலரை இந்த வர்த்தகத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.
இலங்கையில் எந்த வைத்தியசாலைகளில் இவ்வாறு சட்டவிரோத சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Post a Comment