மறக்கடிக்கப்படும் தியாகச் சுவடுகள்
-எம் எம் சபீஸ் -
தன்னை எரித்து தன் சமூகத்துக்கு ஒளிகொடுத்தவன் உருவாக்கிய கட்சி தனது தடத்திலிருந்து மாறி இருளைநோக்கிச் செல்கின்றது. மக்களுக்கு நன்மை பயப்பதில் இருந்து விலகி தனிமனித உடமையாக மாறி வருகிறது.
நமது சமூகம் சாரதி அற்ர வண்டியைப்போல் திக்கற்று சென்றுகொண்டிருந்த வேளையில் அந்தப்பாதையில் பேராபத்துக்களை தினமும் எதிர்நோக்கிய ஒன்றாகவும், விபத்துக்களுக்கு அடிக்கடி ஆளாகிய ஒன்றாகவும் இருந்த நம் சமூகத்தைப்பற்றி அதன் எதிர்கால வளத்தைப்பற்றி ,ஆத்மீக கல்வி விஞ்ஜான சமூகவியல் துறைகளில் அதன் முன்னேற்றம் பற்றி சிந்திப்பவர்கள் ஒருசிலரே இருந்தகாலம் , அதிலும் பெரும்பாலானோர் தமது அரசியல் சாயங்கள் காரணமாக நேர்மையாகவும் நடுநிலமையில் நின்றும் வீரத்துடனும் சிந்திக்க முடியாதவர்களாகவும், சிந்திப்பவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல் அற்ரோராகவும் இருந்தனர்.
இக்காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக்கட்சி என்று இருக்கும்போது முஸ்லிம்களுக்கென்று குரல்கொடுக்க யாருமே இல்லாதது துரதிச்டவசம் எனக்கருதி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்க முற்பட்டார் மறைந்த நம் தலைவர்
கற்களும் முற்களும் நிறைந்த கரடுமுரடான பாதையில் பயனிப்பதுபோன்று இன்னல்களுக்கு மத்தியில் கட்சியை உருவாக்கும்பணியைத் தொடங்கினாலும் 85ம் ஆண்டு கல்முனையில் இடம்பெற்ற கசப்பான கலவரத்தினால் கவலையோடு கொழும்பு சென்றார்
இவ்வேளையில் புத்தளத்தில் உள்ள ஒரு பள்ளி வாயலில் அரச படையினரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பல முஸ்லிம்கள் பள்ளிவாயலினுள் சகீதாக்கப் பட்டனர். அதற்கு பாராளுமன்றத்தில் குரல்கொடுக்க யாரும் இல்லாததும் எதிர்க் கட்சியில் இருந்த acs ஹமீது கட்சித் தலைமையினால் வாய்திறக்க முடியாமல் செய்யப்பட்டபோதும் பாராளுமன்றத்தில் நமக்காகப் பேசியது செல்வனாயகமாகும் .
கணல் விட்டெரியும் தீய்ப்பிளம்பாய் இருந்த அஸ்ரபின் முயற்சிக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ' பள்ளி வாயலினுள் சுடப்பட்டது சரியே' என்ற தீர்ப்பு எண்ணை ஊற்றியது. 1986ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது
தனது சமூகத்துக்காக குரல்கொடுக்க உருவான கட்சிக்கு குர் ஆணும் ஹதீசுமே வழிகாட்டி என்று சொல்லுரைத்தார். மக்களுக்காக முன்னின்றார். மக்களும் திரண்டு வந்தனர்.
ஆனால் இன்று நடப்பது என்ன மறைந்த தலைவரின் வீரத்துக்கு முன்னாள் கோழையாக இருந்த பாசிசப்புலிகளின் தலைவன் பிரபாகரன் தலைவர் அஸ்ரப்பைக் கொலை செய்தான் அந்தக்கொலைகாரனுக்கு முன்னாள் கைகூப்பி பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது இப்போது உள்ள தலைமை.
சூரா என்ற இறைவனின் ஆயத்து மசூறா என்ற தீர்மானத்துக்கு வழங்கிய முக்கியத்துவத்துக்கு பத்தூர் உஹுதூ யுத்தங்கள் சிறந்த உதாரணம் என்றுகூறி தீர்மானகளை மேற்கொண்டுவந்த மறைந்த தலைவர் இருந்த இடத்தில் சுகபோக எச்சப் பேய்களின் அரசன் எடுக்கும் தீர்மானங்கள் போல் இப்போது உள்ள தீர்மானங்கள் இருப்பது நமக்கு புரியாமல் இருப்பது ஏன்?
சிபா என்ற ஆயத்தின்மூலம் உலகின் அனைத்து விடயங்களுக்கும் தீர்வு இருக்கின்றது என்பதும் உங்கள் மார்கத்தை நான் பூர்த்தியாக்கி விட்டேன் என்று இறைவன் கூறிய குரான் இக்கட்சிக்கு வழிகாட்டி என்று மறைந்த நம்தலைவர் அஸ்ரப் கூறினாரே அக்குரானில் ஒரு எம்பிப் பதவியைக் கொடுப்பதற்கு தீர்வில்லாமல் போகுமா?
மக்கள் நாம் சிந்திக்க மறுக்கின்றோம் இத்துப்போன காலாவதியான யோசனைகளை இன்னமும் வைத்துக் கொண்டு காலத்தின் தேவைக்கேற்றவாறு பொய்யுரைக்கும் கயவர்களை நம்புகின்றோம்
மறைந்த தலைவரின் நோக்கம் நம் மக்களுக்கு குரல்கொடுப்பவர்கள் வேண்டும் என்பதுதான் என்பதனை நாம் விளங்க வேண்டும் யார் உண்மையோடு எம்மக்களின் நன்மைக்காக உழைக்கின்ராரோ அவர்களின் கரங்களை பலப்படுத்துவது நமது தேவை என்பதை மறுத்து விடாதீர்கள்
மக்களுக்காக எந்தவொரு போராட்டமும் நடத்திராமல், தியாகம் செய்திராமல் கட்சியின் தலைமைப்பதவியை தாரைவார்த்திருக்கும் உலகில் ஒரேஒரு கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசாகும். அதனால்தான் அதன் அருமை பெருமை தெரியாமல் மறைந்த நம்தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தை கொண்டாட்டமாகக் கருதி பட்டாசு கொளுத்தியவர்களை அருகில் அரவணைத்து கட்சியை முன்கொண்டு செல்லும் நிலை இன்று தோற்றுவிக்கப் பட்டுள்ளது
இது மக்களுக்கான நேரம் எழுத வாசிக்க தெரியாமல் ஒன்றின்மீது ஊறி புரையோடிப்போய் இருந்த காலம் விலகி அனைபேரும் சிந்திக்க, தெரியாதவற்றை அறிந்துகொள்ள அனைத்து வசதிகளையும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
Post a Comment