பெரும்பான்மையினரின் கைதும், முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டியவையும்...!!
ஸ்ரீ ஜயவர்த்தனபுற பல்கலைக்கழகம்-
கடந்த வாரம் பொதுபலசேனா என்ற அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரும், நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 2 ஆவது மகன் யோஷித ராஜபக்ஷவும் கைதானவை யாவரும் அறிந்த ஒன்று. இவ்வாரான நேரங்களில் இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருக்கின்ற முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களாகிய நாம் குறுகிய சிந்தனையுடன் நடந்து கொள்வதை விடுத்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
இன்றைய நவீன காலத்தில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிக அதிகம். எமது நாட்டின் ஆட்சி மாற்றம் கூட சமூக வலைத்தளங்களின் பங்களிப்பால் ஏற்பட்ட ஒன்று என்றால் மிகையாகாது. எனவேதான் சமூக வலைத்தளங்களில் நாம் இடும் பதிவுகளாக இருக்கலாம் அல்லது பதிவேற்றப்படும் புகைப்படங்களாக இருக்கலாம் அனைத்துமே பாரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் இதை அறிந்திடாத எம்மில் பலர் இவ்வாறானவர்களின் கைதின் போது தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவுகள், புகைப்படங்களை பதிவேற்றுவது கவலைக்குறியது.
சிறுபான்மையினரான நாம் ஒன்றை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையினரில் ஏறக்குறைய அரைவாசிப்பேர் முன்னாள் அரசாங்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் ஆதரித்தவர்கள். இறைவனின் உதவியால் சிறுபான்மையினராகிய எமது வாக்குகளே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பக்க பலாமாய் அமைந்தன. எனவேதான் எமது செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் சிறுபான்மையினர் மீதான வெறுப்புக்கும், இனவாதத் தூண்டலுக்கும் காரணமாய் அமைந்துவிடலாம்.
அத்தோடு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றும் யாராலும் எதிர்வுகூற முடியாது. கடந்த அரசாங்கத்தில் சரத் பொன்சேக்காவின் கைதின் போது முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களின் பதிவுகளையும் அவர்களின் தற்போதைய பதிவுகளையும் ஒரு கனம் நினைவு கூறுங்கள். அன்று அவர்கள் மட்டுமல்ல, நாம் கூட எண்ணியிருக்க மாட்டோம் இவ்வாறு நிலைமை தலைகீழாக மாறும் என்று. எனவேதான் எதிர்காலத்தில் இப்போது இருக்கும் நிலைகூட தலைகீழாக அமைந்து விடலாம். அவ்வாறான ஒரு நேரத்தில் எமது இப்போதைய செயற்பாடுகள் மூலம் நாம் சம்பாதிக்கும் பெறும்பான்மையினரின் வெறுப்புக்கள் எமக்கே எதிராய் அமைந்துவிடும். அது நம் எதிர்கால சந்ததியினரின் இருப்புக்கும் கேள்விக்குறியாய் அமைந்துவிடலாம்.
எனவேதான் சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களாகிய நாம் எமது ஒவ்வொரு செயற்பாடுகளையும், அது சமூக வலைத்தளங்கள் சார்ந்த பதிவுகளாக இருக்கலாம் அல்லது பெரும்பான்மையினரோடு தொடர்புடைய ஏனைய செயற்பாடுகளாக இருக்கலாம் அனைத்திலும் குறுகிய சிந்தனையை கைவிட்டு தூர நோக்கோடு சிந்தித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.
In the south , in many electorates , Muslims had been the
ReplyDeletedeciding factor on elections before JR's constitution.And
even with the introduction of executive presidency . this
didn't change much . When all minorities took a united
position , it was further strengthened and that's what
brought the present My3 Ranil to power. Now ,coming to the
point of this article that Muslims should be cautious when
making comments on certain issues that are taking place
these days, yes , it's a good piece of advice but we still
have to remember that our good behaviour has not changed
the attitude of the bad elements in the majority . These
elements will last a long time , even centuries , we've
already come past a century . Whatever we do we must
always remember that vast majority of Srilankans want to
live in peace with all communities.
siru panmayo perum panmayo.. egada paatla inda sari.
ReplyDelete