"அமெரிக்க முஸ்லிம்களுக்கு, மோசமான செய்தி..."
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான குடியரசு கட்சியின் முன்னணி போட்டியாளர் டொனால்ட் டிரம்பின் பிரசார கூட்டத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண் ஒருவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். டிரம்ப் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
தெற்கு கரோலினாவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த பிரசார கூட்டத்தில் 56 வயது ரொஸ் ஹமித் என்ற பெண், தலை மறைப்பிட்டு பச்சைநிற மேலாடையுடன் இருந்தார்.
அதில், ‘சலாம். நான் சமாதானத்துடன் வந்திருக்கிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. அவர் கூட்டத்திற்கு மத்தியில் எந்த இடையூறும் இன்றி அமைதியாக இருந்த போதும், அருகில் இருந்த ஆதரவாளர்கள் அவரை இலக்கு வைத்து ‘டிரம்பம், டிரம்ப்’ என்று கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து அவர் பொலிஸாரால் வெளியேற்றப்படும்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் வெறுக்கத்தக்க கூச்சல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹமிதை வெளியேற்றிய செயல், அமெரிக்க முஸ்லிம்களுக்கு மோசமான செய்தியை கொடுத்திருப்பதாக அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கவுன்ஸில் கவலை வெளியிட்டுள்ளது.
நல்ல தைய்ரியம் தான் நம்ம முஸ்லீம் ஆண்கலுக்கே தொட நடுங்கும் இவன்கலுக்கு தேவயா குர் ஆண் த்ர்ஜமா யாரோ கொடுக்கிர யாருக்கோ நடுங்குர
ReplyDeleteஉலகில் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் தேடும் அமெரிக்க தனது நாட்டில் அதை இழக்கச்செய்துகொண்டிருக்கின்றது!
ReplyDelete