அமைச்சர்கள் பற்றிய, இரகசிய அறிக்கை
கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறிய அமைச்சர்கள் பற்றி இரகசிய அறிக்கை ஒன்றை பிரதமர் கோரியுள்ளார்.
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளாத அனைத்து அமைச்சர்கள் பற்றியும் இரகசிய அறிக்கை ஒன்றை அவசரமாக பிரதமர் கோரியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான அரச உயர் அதிகாரிகள் இந்த அறிக்கையை தயாரிக்கவுள்ளனர்.
அமைச்சுப் பதவிப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள், ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சுப் பதவிக்கான பொறுப்பினையும் அரசாங்கத்திற்கான கூட்டுப் பொறுப்பு தொடர்பிலும் உரிய முறையில் பங்களிப்பு வழங்கத் தவறிய அமைச்சர்கள் பற்றி ஆராயப்பட உள்ளது.
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பு உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் அமைச்சர்களின் நடவடிக்கைள் பற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் செய்துள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
இரண்டு முக்கிய அமைச்சர்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் இந்த இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிக்கையின் உள்ளீடுகள் கவனத்தில் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Post a Comment