'சிங்கலே' யின் பேரணி - முதுகெலும்பில்லாத பொலிஸும், குருட்டுச் சட்டமும் (வீடியோ)
"தெயட பன தெமு சிங்கலே' என்ற பெயரில் உறுதிமொழி பெற்று கொள்வதற்காக சிங்கலே தேசிய அணியினர், நேற்று கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்றிருந்தனர்.
இதன் போது காவல் துறையினருக்கும் குறித்த அணியினருக்கும் இடையே முறுகள் நிலை ஏற்பட்டது.
கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்கத்தில் இருந்து குறித்த அணியினர், தமது விஷேட வாகன பேரணியை ஆரம்பித்தனர்.
இதன் போது பேரணி வாகனங்கள் மற்றும் அதன் போது வந்த தரப்பினரிடம் பௌத்த கொடிகள் இருந்தன.
இதன் போது கடந்த காலங்களில் பேசப்பட்ட சிறுபான்மையரின் சின்னம் இல்லாத தேசிய கொடிகளை எடுத்து சென்றுள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்த பேரணி முற்பகல் 2.00 மணியளவில் மவனெல்ல நகருக்கு அருகில் வந்த போது, அங்கு பட்டாசுகளை வெடித்து மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று காவல் துறையினர் ஆலோசனை வழங்கினர்.
இதன் போது மானெல்ல காவல் துறையினருக்கும் பேரணியில் வந்தவர்களுக்கும் இடையே முறுகள் நிலை ஏற்பட்டது.
பின்னர் பேரணி, கண்டி ஸ்ரீதலதா மாளிகை அருகில் வந்த போது, தேசிய கொடியல்லாத கொடிகளை தலதா மாளிகைக்கு எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதன் போது மீண்டும் அங்கு முறுகள் நிலை ஏற்பட்டதுடன், பிக்குமார்களுக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
பின்னர் குறித்த அணியினர், உறுதிமொழியினை பெற்றுகொண்டனர். வீடியோ
பகிரங்கமாக பயங்கரவாதம் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளது.இதனை அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது இவ்வாறான மதம் கலந்த கொடியுடன் தமிழ் மக்களோ முஸ்லிம்களோ பாதை யாத்திரை சென்றால் இந்த அரசு பயங்கரவாத செயல் என்றும் இகழ்ச்சியில் ஈடு பட்டவர்களை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்வார்கள்.முழுமையாக சொல்லவதானால் இந்த சின்ஹலே இயக்கம் ஒரு பயங்கவாதத்தை ஊக்குவிக்கு ஆரம்ப கட்டம்.
ReplyDeleteமுழுமையான துவேசமான பேச்சு இது.இந்த நாட்டில் இவர் ஆட்சி செய்த காலத்தில் கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டுதான் இப்போது சின்ஹலே ஸ்டீகர் புதிய தேசிய கொடி போதுபல சென அட்டகாசத்துக்கல்லாம் பணத்தை அள்ளி வீசுவது அப்போது கொள்ளை அடித்தது இப்போது இனக்கலவரத்தை ஏற்ப்படுத்தி அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.அனைத்தும் பொதுமக்களின் சொத்தை கொள்ளையடித்தது என்பது மட்டும் உண்மை.இதற்க்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு கூற வேண்டும் இதுவரையும் எந்த விதமான காட்ட சாட்டமான விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை குற்றவாளிகள் எல்லாம் ஒரு பக்கமாக சந்தோசத்தில் இருக்கிறார்கள் எப்படியாவது இந்த அரசை கவுட்டு நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற ஆதங்கத்தில்.மைத்திரியும் ரணிலும் ஆளாளுக்கு முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் மிச்சம்.இவர்களால் ஒன்றும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் உள்ளார்கள் இந்த பழைய கள்ளர்களை பிடிக்க வேண்டிய காலம் கடந்துவிட்டது அரசாங்கம் வந்தவுடன் ஓரிரு மாதத்தில் கைது வேலைகளை செய்து இருந்தால் வாய்கள் அடங்கி இருக்கும் ஆனால் இப்போது அரசுக்கு சரிவு ஏற்ப்படும் காலமாக உள்ளது.மறுமுனையின் பலம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது அந்தளவுக்கு இனத்துவேசத்தை விதைத்து தம் பக்கம் மக்களை அணைத்துக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை
ReplyDelete