நிந்தவூர் மாணவர்களின் சாதனை
(சுலைமான் றாபி)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் அதான் வித்தியாலய மாணவர்களின் விடா முயற்சி சாதனையாக மாறிய சம்பவம் நேற்றைய தினம் (14) இப்பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழாவின் போது வெளியானது. அதில் அண்மையில் இடம்பெற்ற 100 Box Calculation போட்டியில் இப்பாடசாலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வலய மட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அந்த வகையில் ஏ.முகம்மட் ஷிறாப் எனும் மாணவன் கோட்ட மட்டத்தில் 2ம் இடத்தினைப் பெற்றதோடு வலய மட்டத்தில் 01வது இடத்தினைப் பெற்றுள்ளார். இதேவேளை ஏ.சிறாப் ஆகில் எனும் மாணவன் கோட்ட மட்டத்தில் 1ம் இடத்தினைப் பெற்றதோடு வலய மட்டத்தில் 02வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
மேலும் இப்பாடசாலையைச் சேர்ந்த எம்.ஜே.இனாஸ் அப்துல்லாஹ் எனும் மாணவன் அழகியல் போட்டியில் வலய மட்டத்தில் 01வது இடத்தினையும் பெற்று சாதனையினை நிலை நாட்டியுள்ளதோடு இப்பாடசாலைக்கு பெருமையினையும் சேர்த்துள்ளார்.
இதே வேளை நேற்று இந்தப் பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழாவில் கலந்து கொண்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .திருமதி சஹிலா, ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.நஜிமுன்னிசா, அதிபர் திருமதி ஏ.பி.சலீம் உள்ளிட்ட ஆசிரியர்களால் திறமைகளை வெளிக்காட்டிய இம் மாணவர்களுக்கு பாராட்டி கெளரவமளித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment